×

கும்ப ராசி குருபெயர்ச்சி பலன்கள் (2018-2019)

துலாம் ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 10 ஆம் இடத்தில் குரு பெயர்ச்சியாக இருப்பதால் வரக்கூடிய குரு பெயர்ச்சி எவ்வாறான பலன்களை தரும் என்பதைபற்றி இந்த பதிவில் மிகவும் விரிவாக பார்போம். கும்ப ராசிக்கு அதிபதியாக சனி பகவான் விளங்குவதால், உழைப்பை மட்டுமே நீங்கள் மூலதனமாக கொண்டு செயல்படுவீர்கள் . எடுத்தகாரியங்கள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி பெறுவதற்கு கடினமாக உழைப்பீர்கள். உங்கள் ராசிக்கு 11 மற்றும் 2க்கு அதிபதியான குருபகவான் இதுவரை
 

துலாம் ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான்  உங்கள் ராசிக்கு 10 ஆம் இடத்தில் குரு பெயர்ச்சியாக இருப்பதால் வரக்கூடிய குரு பெயர்ச்சி எவ்வாறான பலன்களை தரும் என்பதைபற்றி இந்த பதிவில் மிகவும் விரிவாக பார்போம்.

கும்ப ராசிக்கு அதிபதியாக சனி பகவான் விளங்குவதால், உழைப்பை மட்டுமே நீங்கள் மூலதனமாக கொண்டு செயல்படுவீர்கள் . எடுத்தகாரியங்கள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி பெறுவதற்கு கடினமாக உழைப்பீர்கள்.

உங்கள் ராசிக்கு 11 மற்றும்  2க்கு அதிபதியான குருபகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 9 இடத்தில் இருந்து கொண்டு பல்வேறு மேன்மையான பலன்களை வழங்கி வந்தார்.

குரு பகவான் வருகின்ற அக்டோபர் மாதம்  4 ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 10 ஆம் இடமாகிய விருச்சிகத்தில் சஞ்சரிக்க உள்ளதால் தொழில் வியாபாரத்தில் லாபமின்மை,உத்தியோகத்தில் நிம்மதி குறைவு, வீண்பணி இடமாற்றம் , பணிச்சுமை ஏற்படும், எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும்,பணவரவுகளில் நெருக்கடி,குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, சுய முயற்சிகளில் தடை ஏற்படும்.

குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து உங்களது ராசிக்கு 2 ஆம் இடமான குடும்ப ஸ்தானத்தினை குரு பார்ப்பதால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் .மேலும் தனவரவுகள் உண்டாகும்.சுப விரயங்கள் ஏற்படக்கூடும்

குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து உங்களது ராசிக்கு 4 ஆம் இடமான சுக ஸ்தானத்தினை குரு பார்ப்பதால் தாயார் உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவுகள் நீங்கும் ,குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும்,வண்டி,வாகனம்வீடுவாங்குவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து உங்களது ராசிக்கு 6 ஆம் இடம் மறைவு ஸ்தானத்தினை குருபார்ப்பதால் கடன் தொல்லைகள் நீங்கும்,அடிவயிறு பிரச்சனைகள் உள்ளவர்கள் விரைவில் குணம் அடைவார்கள்.ஒரு சிலருக்கு வெளிநாடு சென்று வர வாய்புக்கள் உண்டாகும்

மாணவர்கள்: கும்ப ராசி மாணவர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் ஏற்றமான ஆண்டாக இருக்கும். வெளிநாடு சென்று படிப்பதற்கு பண உதவிகள் கிடைக்கும்.

பெண்கள்: கும்ப ராசி பெண்களுக்கு பண உதவி கிடைக்கும். உடல் நிலையில் கவனம் தேவை. அரசாங்க உதவிகள் கிடைக்கும்.

கலைஞர்கள்: கும்ப ராசி கலைத்துறையினருக்கு வருமானம் அதிகமாக இருக்கும். இந்த ராசிகார்களுக்கு மிகுந்த நன்மை தரும் குரு பெயர்ச்சியாக இந்த குரு பெயர்ச்சி விளங்குகிறது .

அரசியல்வாதிகள்: கும்ப ராசி அரசியல்வாதிகளுக்கு இந்த குரு பெயர்ச்சி  மிகவும் சிறப்பான ஆண்டாக அமைய வாய்ப்புககள் உள்ளது .பேச்சில் கவனம் தேவை.

விவசாயிகள்: கும்ப ராசி விவசாயிகள் விவசாயம் சார்ந்த தொழிலில் நன்மைகள் உண்டாக்கும். விவசாயத்திற்கு தேவையான நீர் பாசன வசதிகள் கிடைக்கும். விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும் .

பரிகாரம்: கும்ப ராசியில் பிறந்தவர்கள் திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமியை தரிசனம் செய்து வர உங்கள் வாழ்வில் சகல செல்வங்களையும் பெற்று சிறப்புடன் வாழலாம்.