×

குப்பையிலிருந்து நாள்தோறும் 2 டன் உரம் தயாரிக்கும் சத்தியமங்கலம் நகராட்சி!

குப்பைகளான காய்கறி கழிவுகள், அழுகிய பழங்கள் உள்ளிட்ட பொருட்களை இயந்திரத்தை பயன்படுத்தி மாவாக்கி, வெயிலில் உலர வைக்கப்படுகின்றன. இவ்வாறு 45 நாட்கள் வரை உலர வைக்கப்பட்ட மாவாக்கப்பட்ட குப்பையை இயந்திரத்தை பயன்படுத்தி நன்கு சலித்து, அதிலிருந்து வரும் உரத்தை பைகளில் அடைத்து கிலோ ஒரு ரூபாய் என விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர். 27 வார்டுகளை உள்ளடக்கிய சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட நிறுவனங்கள் மற்றும் வீடுகளிலிருந்து நாள்தோறும் 5 முதல் 6 டன் அளவில் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.
 

குப்பைகளான காய்கறி கழிவுகள், அழுகிய பழங்கள் உள்ளிட்ட பொருட்களை இயந்திரத்தை பயன்படுத்தி மாவாக்கி, வெயிலில் உலர வைக்கப்படுகின்றன. இவ்வாறு 45 நாட்கள் வரை உலர வைக்கப்பட்ட மாவாக்கப்பட்ட குப்பையை இயந்திரத்தை பயன்படுத்தி நன்கு சலித்து, அதிலிருந்து வரும் உரத்தை பைகளில் அடைத்து கிலோ ஒரு ரூபாய் என விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர்.

27 வார்டுகளை உள்ளடக்கிய சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட நிறுவனங்கள் மற்றும் வீடுகளிலிருந்து நாள்தோறும் 5 முதல் 6 டன் அளவில் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. சத்தியமங்கலம் – அத்தாணி சாலையில் அமைக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்ட உரக்கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டு, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது. மக்கும் குப்பைகளான காய்கறி கழிவுகள், அழுகிய பழங்கள் உள்ளிட்ட பொருட்களை இயந்திரத்தை பயன்படுத்தி மாவாக்கி, வெயிலில் உலர வைக்கப்படுகின்றன. இவ்வாறு 45 நாட்கள் வரை உலர வைக்கப்பட்ட மாவாக்கப்பட்ட குப்பையை இயந்திரத்தை பயன்படுத்தி நன்கு சலித்து, அதிலிருந்து வரும் உரத்தை பைகளில் அடைத்து கிலோ ஒரு ரூபாய் என விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர்.

இங்கு நாள்தோறும் 2 டன் வரை உரம் தயாரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மக்கும் குப்பைகளைக் கொண்டு உரம் தயாரிக்கும் பிரிவில் 137 சுகாதார பணியாளர்கள் பணிபுரிகின்றனர் என்றும் விவசாயிகள் மத்தியில் இந்த உரத்துக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி கூறியுள்ளார். கடந்த 2018 ம் ஆண்டின் சிறந்த நகராட்சிக்கான முதல் பரிசை தமிழக அரசிடமிருந்து சத்தியமங்கலம் நகராட்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.