×

குடியை விடு… படிக்க விடு… மீண்டும் பதாகைகளுடன் புறப்பட்ட சிறுவன் ஆகாஷ்

ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் தமிழக அரசுக்கு அதிகளவு வருவாய் ஈட்டி தரும் மதுக்கடைகள் கிட்டதட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டுள்ளன. இதனால் குடிமகன்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் அரங்கேறின. ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் தமிழக அரசுக்கு அதிகளவு வருவாய் ஈட்டி தரும் மதுக்கடைகள் கிட்டதட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டுள்ளன. இதனால் குடிமகன்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் அரங்கேறின. இதை தொடர்ந்து தமிழகத்தில் நாளை (மே 7) முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படும்
 

ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் தமிழக அரசுக்கு அதிகளவு வருவாய் ஈட்டி தரும்  மதுக்கடைகள் கிட்டதட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டுள்ளன. இதனால் குடிமகன்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் அரங்கேறின.

ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் தமிழக அரசுக்கு அதிகளவு வருவாய் ஈட்டி தரும்  மதுக்கடைகள் கிட்டதட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டுள்ளன. இதனால் குடிமகன்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் அரங்கேறின. இதை தொடர்ந்து தமிழகத்தில் நாளை (மே 7)   முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானத்தின் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை வரியினை தமிழக அரசு 15% உயர்த்தியுள்ள காரணத்தினால், நாளை முதல் மதுபானம் விலை உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வராத நிலையில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கவும், ஆன்லைனில் விற்பனை செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்நிலையில் தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது  என்கிற கோரிக்கையை வலியுறுத்தி ஏற்கனவே பல்வேறு போராட்டங்களை நடத்திய சிறுவன் ஆகாஷ், விஷ்டோரியா, ஆதர்ஷ், சபரி, சுப்ரியா ஆகிய 5 சிறுவர்கள்  குடியை விடு படிக்க விடு என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை படூர் முதல் முதல்வர் பழனிசாமி இல்லம் வரை சுமார் 30கி.மீ நடைபயணம் மேற்கொண்டு டாஸ்மாக் திறப்பதற்கு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

முன்னதாக காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த படூர் ஊராட்சியில் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த 7வயது சிறுவன் ஆகாஷ் சிறுவன் பள்ளி பையை தோளில் சுமந்தபடி, கையில் ‘குடியை விடு படிக்க விடு’ பதாகை ஏந்தி மதுக்கடை முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடதக்கது.