×

காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட பெண் மரணம் : மருத்துவர்கள் இன்றி நடந்த சிகிச்சையால் மரணம் என உறவினர்கள் போராட்டம்..!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், ஷப்னா என்ற பெண் காய்ச்சலால் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், ஷப்னா என்ற பெண் காய்ச்சலால் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருவதால், ஷப்னாவுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் தான் ஷப்னா உயிரிழந்தார் என, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் வாசலின் முன் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த போராட்டம்
 

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், ஷப்னா என்ற பெண் காய்ச்சலால் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், ஷப்னா என்ற பெண் காய்ச்சலால் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருவதால், ஷப்னாவுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் தான் ஷப்னா உயிரிழந்தார் என, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் வாசலின் முன் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தயது. 

இதனை அறிந்த மருத்துவமனையின் டீன், ஷப்னாவின் உறவினர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதில், ஷப்னாவின் இரத்தத்திலிருந்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாகவும், பிளேட்லெட்டுகள் குறைவாக இருந்தால் காப்பாற்றுவது கடினம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஷப்னாவுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவர்களுடன் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், இரத்தத்தில் இருந்த  பிளேட்லெட்டுகள் குறைவாக இருந்ததால் ஷப்னாவை காப்பாற்ற முடியவில்லை என்றும் கூறி ஷப்னாவின் உறவினர்களை சமாதானம் செய்துள்ளார். அதன் பிறகு, உண்மையை அறிந்த உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டு ஷப்னாவின் உடலை வாங்கிக் கொண்டு சென்றுள்ளனர்.