×

காணாமல் போன 60 மீனவர்கள்: சோகத்தில் உறவினர்கள்!

கேரளாவின் கொச்சி மற்றும் கோவாவின் ஹார்வா துறைமுகங்களில் படகுகளுடன் தஞ்சம் புகுந்தனர் மீனவர்கள் 60பேர் மீன் பிடிக்க சென்று காணாமல் போன நிலையில் அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் அவர்களது உறவினர்கள் கவலையில் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் வள்ளவிலை, தூத்தூர் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 8 [படகுகளில், மீன் பிடிக்க கடந்த 15 நாட்களுக்கு முன்பு கடலுக்கு சென்றனர். அப்போது அரபிக்கடலில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் 3 படகுகள் கேரளாவின் கொச்சி மற்றும் கோவாவின்
 

கேரளாவின் கொச்சி மற்றும் கோவாவின் ஹார்வா துறைமுகங்களில் படகுகளுடன் தஞ்சம் புகுந்தனர்

மீனவர்கள் 60பேர் மீன் பிடிக்க சென்று காணாமல் போன நிலையில் அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் அவர்களது உறவினர்கள் கவலையில் உள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டம் வள்ளவிலை, தூத்தூர் பகுதிகளைச் சேர்ந்த  மீனவர்கள் 8 [படகுகளில், மீன் பிடிக்க கடந்த 15 நாட்களுக்கு முன்பு கடலுக்கு சென்றனர். அப்போது அரபிக்கடலில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் 3 படகுகள் கேரளாவின் கொச்சி மற்றும் கோவாவின் ஹார்வா துறைமுகங்களில் படகுகளுடன் தஞ்சம் புகுந்தனர். அதிலிருந்த 30 மீனவர்கள் பத்திரமாக உள்ளார்கள். 

இருப்பினும் மீதமுள்ள 5 படகுகளிலிருந்த 60 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. தூத்தூரை சேர்ந்த 120 மீனவர்கள்  என்னவானார்கள் என்பது குறித்து தெரியவில்லை. அதிநவீன தகவல் தொடர்பு கருவிகள்  மூலம் கூட அவர்களை தொடர்பு கொள்ளமுடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களது உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.