×

கல்வி, செல்வம், வீரத்தைத் தரும்  தாழம்பூர் திரிசக்தி அம்மன்

காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூரில் இருக்கிறது அருள்மிகு திரிசக்தி அம்மன் ஆலயம். ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் பிரமாண்டமாய் வரவேற்கும் ஆலயத்திற்குள் நுழைந்தால், பிரகாரத்தில் பால கற்பக விநாயகர், பாலமுருகன், பைரவர், ஞான சரஸ்வதி, மூகாம்பிகை, லட்சுமி என்று தனித்தனியே அருள்பாலிக்கிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூரில் இருக்கிறது அருள்மிகு திரிசக்தி அம்மன் ஆலயம். ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் பிரமாண்டமாய் வரவேற்கும் ஆலயத்திற்குள் நுழைந்தால், பிரகாரத்தில் பால கற்பக விநாயகர், பாலமுருகன், பைரவர், ஞான சரஸ்வதி, மூகாம்பிகை, லட்சுமி என்று தனித்தனியே
 

காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூரில் இருக்கிறது அருள்மிகு திரிசக்தி அம்மன் ஆலயம். ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் பிரமாண்டமாய் வரவேற்கும் ஆலயத்திற்குள் நுழைந்தால், பிரகாரத்தில் பால கற்பக விநாயகர், பாலமுருகன், பைரவர், ஞான சரஸ்வதி, மூகாம்பிகை, லட்சுமி என்று தனித்தனியே அருள்பாலிக்கிறார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூரில் இருக்கிறது அருள்மிகு திரிசக்தி அம்மன் ஆலயம். ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் பிரமாண்டமாய் வரவேற்கும் ஆலயத்திற்குள் நுழைந்தால், பிரகாரத்தில் பால கற்பக விநாயகர், பாலமுருகன், பைரவர், ஞான சரஸ்வதி, மூகாம்பிகை, லட்சுமி என்று தனித்தனியே அருள்பாலிக்கிறார்கள்.

இங்குள்ள சரஸ்வதி, மூகாம்பிகை, லட்சுமி ஆகிய மூன்று தேவியர்களையும் வழிபட கல்வி, செல்வம், மனவலிமை போன்றவற்றில் நிச்சயம் சிறந்து விளங்கலாம். 
தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள், தங்கள் குழந்தைகளுடன் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். பிரார்த்தனைகள் நிறைவேறியதும், மூன்று அம்மனுக்கும் வஸ்திரம் சாற்றி, அபிஷேகம் செய்து  மீண்டும் வந்து வழிபடுகிறார்கள்.

கோபுரத்துள் நுழைந்து, பிரகாரம் சுற்றி மண்டபத்தைத் தாண்டியதும், தனித்தனியே மூன்று கருவறைகள் உள்ளது. ஒவ்வொரு கருவறைக்கு மேலும் தனித்தனி விமானங்கள். முதலில் கல்விக் கடவுளான ஞான சரஸ்வதி, நான்கு கரங்களுடன் அமர்ந்திருக்கிறாள். மேலிரு கரங்களில் ஐபமாலையும், கமண்டலமும் ஏந்தி, இடது கரத்தில் ஓலைச்சுவடியும், வலது கரத்தில் சின்முத்திரை காட்டி தரிசனம் தருகிறாள்.
படிப்பில் மந்தமானவர்கள் இவளைப் பணிந்து வணங்க, படிப்பாற்றலும், படைப்பாற்றலும் மேலோங்குகிறது. அடுத்து கிரியா சக்தியாக திகழும் மூகாம்பிகையின் சன்னதி. பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் மூகாம்பிகையை வழிபட மனவலிமைப் பெற்ற அச்சம் விலகுகிறது.  அருகிலேயே இச்சா சக்தியாகிய லட்சுமி தேவி அமர்ந்திருக்கிறாள். அபயவரத ஹஸ்தம் காட்டி, சாந்த சொரூபிணியாக முகத்தில் புன்னகை தவழ வீற்றிருக்கும் லட்சுமியை வழிப்பட்டு வந்தால், அன்னையின் அருட்பார்வையில் வறுமை அகன்றோடி, செல்வம் கைகூடுகிறது.

ஒரே ஆலயத்தில் மூன்று அன்னையரையும் தரிசிப்போருக்கு சகல சுகங்களும் கிடைப்பது நிச்சயம்.
இச்சா சக்தியாக ஸ்ரீ லக்ஷ்மி தேவி, கிரியா சக்தி தருபவளாக  ஸ்ரீ மூகாம்பிகை, ஞானசக்தியின் அதிபதியாக  ஸ்ரீ சரஸ்வதிதேவி ஆகிய மூன்று தேவியர் எழுந்தருளி அருள்பாலிக்கும் இந்த ஆலயத்துக்கு அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.