×

கல்கி சாமியார் மீது அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு…!

5 நாட்களாக நடந்த வருமான வரித்துறை சோதனை கடந்த 21 ஆம் தேதி நிறைவடைந்தது. வரி ஏய்ப்பு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில், ஆந்திர மாநிலம் கோவர்த்தன புரம் பகுதியில் உள்ள கல்கி சாமியாரின் ஆசிரமத்திலும் அவரது மகன் என்.கே.வி கிருஷ்ணா சம்பந்தப்பட்ட சென்னை உள்ளிட்ட 40 இடங்களிலும் வருமான வரித்துறையினர் கடந்த 16 ஆம் தேதி அதிரடியாகச் சோதனையில் ஈடுபட்டனர். 5 நாட்களாக நடந்த வருமான வரித்துறை சோதனை கடந்த 21 ஆம் தேதி நிறைவடைந்தது.
 

5 நாட்களாக நடந்த வருமான வரித்துறை சோதனை கடந்த 21 ஆம் தேதி நிறைவடைந்தது. 

வரி ஏய்ப்பு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில், ஆந்திர மாநிலம் கோவர்த்தன புரம் பகுதியில் உள்ள கல்கி சாமியாரின் ஆசிரமத்திலும் அவரது மகன் என்.கே.வி கிருஷ்ணா சம்பந்தப்பட்ட சென்னை உள்ளிட்ட 40 இடங்களிலும் வருமான வரித்துறையினர் கடந்த 16 ஆம் தேதி அதிரடியாகச் சோதனையில் ஈடுபட்டனர். 5 நாட்களாக நடந்த வருமான வரித்துறை சோதனை கடந்த 21 ஆம் தேதி நிறைவடைந்தது. 

அந்த சோதனையில், கல்கி ஆசிரமத்திலிருந்து கணக்கில் வராத 90 கிலோ தங்கமும், 20 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்களையும் வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். கல்கி சாமியாரும் அவரது மகனும் வெளிநாடுகளில் அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பேரில் சொத்து வாங்கியிருப்பதும், பல கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. 

அதனையடுத்து, இந்த வழக்கு வருமான வரித்துறையினரின் விசாரணைக்குப் பிறகு அமலாக்கத்துறையின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், ரூ.85 கோடியை ஹவாலா மூலம் கல்கி சாமியார் குடும்பத்தினர் வெளிநாடுகளில் முதலீடு செய்ததாகப் புகார் எழுந்ததுள்ளது. அதுமட்டுமின்றி, சுமார் ரூ.100 கோடி வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கல்கி சாமியார் விஜய் குமார் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.