×

கன்னி ராசி குருபெயர்ச்சி பலன்கள் (2018-2019)

கன்னி ராசிக்கு 2 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 3 ஆம் இடத்திற்கு செல்வதால் வரக்கூடிய குரு பெயர்ச்சி எவ்வாறான பலன்களை தரும் என்பதைபற்றி இந்த பதிவில் மிகவும் விரிவாக பார்போம். கன்னி ராசிக்கு அதிபதியாக புதன் விளங்குவதால் நீங்கள் எந்த ஒரு செயலிலும் நிதானத்துடனும்,பொறுமையுடனும் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். அடுத்தவர் மனதில் உள்ளதை தெரிந்து கொள்வதில் உங்களுக்கு நிகர்யாரும் இருக்கமுடியாது. சூழ்நிலைகளுக்கு ஏற்றார் போல் உங்களது கருத்துக்களை மாற்றி கொள்வீர்கள் . சிறிது சுயநலத்துடனும்
 

கன்னி ராசிக்கு 2 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 3 ஆம் இடத்திற்கு செல்வதால் வரக்கூடிய குரு பெயர்ச்சி எவ்வாறான பலன்களை தரும் என்பதைபற்றி இந்த பதிவில் மிகவும் விரிவாக பார்போம்.

கன்னி ராசிக்கு அதிபதியாக புதன் விளங்குவதால் நீங்கள் எந்த ஒரு செயலிலும் நிதானத்துடனும்,பொறுமையுடனும் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.

அடுத்தவர் மனதில் உள்ளதை தெரிந்து கொள்வதில் உங்களுக்கு நிகர்யாரும் இருக்கமுடியாது. சூழ்நிலைகளுக்கு ஏற்றார் போல் உங்களது கருத்துக்களை மாற்றி கொள்வீர்கள் .

சிறிது சுயநலத்துடனும் இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு  4 மற்றும் 7 க்கு அதிபதியான குருபகவான் இதுவரை உங்கள் ராசிக்கு  2 ஆம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை செய்து கொண்டு இருந்தார்.

குரு பகவான் வருகின்ற  அக்டோபர் மாதம்  4ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு  3 ஆம் இடமாகிய விருச்சிகத்தில் சஞ்சரிக்க உள்ளதால் எடுக்கும் முயற்சிகளில் இடையூறு ,பொருளாதார நிலையில் நெருக்கடி, நிம்மதி குறைவு,உடன் பிறப்புகளுடன் கருத்து வேறுபாடு,வரவுக்கு மீறிய செலவு,தொழில் வியாபாரத்தில் மந்த நிலை,உத்யோகத்தில் வேலை பளு அதிகரிப்பு வீண் இடமாற்றம் உண்டாகும்.  

குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து உங்களது ராசிக்கு  7 ஆம் இடமான களத்திர ஸ்தானத்தினை பார்ப்பதால் திருமணம் கைகூடும் ,கணவன் மனைவி இடையே ஏற்பட்டு வந்த  கருத்து வேறுபாடுகள் நீங்கும். இளம் வயதினருக்கு காதல் கைகூடும் காலகட்டமாக இந்த குருபெயர்ச்சி அமைந்துள்ளது.

குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து உங்களது ராசிக்கு  9 ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தினை குரு பார்ப்பதால் தந்தை வழி உறவுகள் மூலம் நன்மை உண்டாகும். சுப காரியங்களில் மேன்மை உண்டாகும். பணவரவு நன்மை பயக்கும்.வியாபாராத்தில் முன்னேற்றம் உண்டாகும். உங்களது தொழிலில் புதிய முதலீடுகளால் லாபம் பயக்கும்

குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து உங்களது ராசிக்கு  11 ஆம் இடம் ஆகிய லாபஸ்தானத்தினை குரு பார்ப்பதால் தாராள பணவரவு உண்டாகும். சுப காரியங்கள் கைகூடும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் மூத்த சகோதரர்கள் மூலம் நன்மைகள் உண்டாகும்.

மாணவர்கள்: கன்னி ராசி மாணவர்களுக்கு நினைத்த இடத்தில் நினைத்த படிப்பினை படிக்க வாய்ப்புகள் உருவாகும்.

 

பெண்கள்: கன்னி ராசி பெண்களுக்கு சிறப்பான ஆண்டாக அமைய வாய்ப்புகள் அதிகம்.பெற்றோர்கள் ஆதரவு கிடைக்கும்.இந்த ராசி பெண்களுக்கு அரசாங்க உதவிகள் கிடைக்கும்.

கலைஞர்கள்: கன்னி ராசி கலைத்துறையினருக்கு ஏற்றமான காலம் இதுவாகும்.பொருளாதரத்தில் நன்மை உண்டாகும்.

அரசியல்வாதிகள்:  கன்னி ராசிஅரசியல்வாதிகள் மிகவும் சிறப்பான குரு பெயர்ச்சியாக இந்த ஆண்டு அமையும் .உத்திரம் மற்றும் ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த ஆண்டு மிகுந்த நன்மைகள் உண்டாகும்

 

விவசாயிகள்: கன்னி ராசி விவசாயிகள் விவசாயம் சார்ந்த தொழிலில் அதிக நன்மை உண்டாக்கும்.விவசாயத்திற்கு தேவையான நீர் பாசன வசதிகள் கிடைக்கும்.இந்த ராசி விவசாயிகளுக்கு பொருளாதார முன்னேற்றம் உண்டாகும்.

பரிகாரம்: கன்னி ராசியில் பிறந்தவர்கள் பழநி மலை முருகப்பெருமானையும்,திருச்செந்தூர் முருக பெருமானையும்  தரிசனம் செய்துவர உங்கள் வாழ்வில் சகல செல்வங்களையும் பெற்று சிறப்புடன் வாழலாம்.