×

கணபதியை வணங்கும் போது ஏன் நம் தலையின் இரு பக்கங்களிலும் கொட்டிக் கொள்கிறோம்?

நாம் புதிதாக எந்த ஒரு வேலையைத் துவங்கினாலும், முதன் முதலில் விநாயகர் வழிபாடு செய்கிறோம். அப்படிச் செய்து விட்டு துவங்குவது தான் முறையும் கூட. நாம் புதிதாக எந்த ஒரு வேலையைத் துவங்கினாலும், முதன் முதலில் விநாயகர் வழிபாடு செய்கிறோம். அப்படிச் செய்து விட்டு துவங்குவது தான் முறையும் கூட. கோயில்களில் வாசல் பார்த்த மாதிரி விநாயகர் அமர்ந்திருப்பதையும் பார்த்திருப்பீர்கள். குலதெய்வ வழிபாடோ, இஷ்ட தெய்வ வழிபாடோ… முதல்ல விநாயகரை வழிபட்டு விட்டு தான் பிற தெய்வங்களையும்
 

நாம் புதிதாக எந்த ஒரு வேலையைத் துவங்கினாலும், முதன் முதலில் விநாயகர் வழிபாடு செய்கிறோம். அப்படிச் செய்து விட்டு துவங்குவது தான் முறையும் கூட.

நாம் புதிதாக எந்த ஒரு வேலையைத் துவங்கினாலும், முதன் முதலில் விநாயகர் வழிபாடு செய்கிறோம். அப்படிச் செய்து விட்டு துவங்குவது தான் முறையும் கூட. கோயில்களில் வாசல் பார்த்த மாதிரி விநாயகர் அமர்ந்திருப்பதையும் பார்த்திருப்பீர்கள். குலதெய்வ வழிபாடோ, இஷ்ட தெய்வ வழிபாடோ… முதல்ல விநாயகரை வழிபட்டு விட்டு தான் பிற தெய்வங்களையும் வழிபட வேண்டும். 

விநாயகரை வழிபடும் பொழுது, நமது விரல்களை மடக்கி, முட்டியாகப் பிடித்து மூன்று முறை தலையிலே கொட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தலையில் கொட்டிக்கொள்ளும் பொழுது மத்தகத்திலிருக்கும் அமிர்தமானது சுரந்து தண்டுவடம் வழியாக மூலாதாரத்தில் ஒளி ரூபமாக இருக்கும் விநாயகரைச் சென்றடைந்து அபிசேகமாகின்ற பொழுது அவரின் அருள் கிடைக்கப்பெறும்.

முன்னொரு காலத்தில் விநாயகர், காக்கை உருவம் எடுத்து அகத்தியரின் கமண்டலத்தைக் கவிழ்த்து அதிலிருந்த நீரைக் காவிரி நதியாக ஓடவைத்தார். இதைக் கண்ட அகத்திய முனிவர் கோபம் கொண்டு காக்கை வடிவிலிருந்த விநாயகரை விரட்டினார். துரத்திக் கொண்டு ஓடும் பொழுது, காக்கை ஒரு சிறுவனாக வடிவம் கொண்டு ஓடிய பொழுதும், அகத்தியர் கோபம் தணியாமல்,  அச்சிறுவனைத் துரத்திச் சென்று அவனது தலையில் கொட்டினார். தலையில் கொட்டு வாங்கியதும் சிறுவனாக நின்ற விநாயகப் பெருமான் தனது திருச்சொரூபத்தினை அகத்தியருக்குக் காண்பித்தார். 

விநாயகரை வணங்கிய அகத்திய முனிவர், தான் செய்த தவறை அப்பொழுதே உணர்ந்து தனது இரண்டு கைகளினாலும் தனது தலையிலே கொட்டி தோப்புக்கரணம் போட்டு தன்னை மன்னித்தருளுமாறு விநாயகரை வேண்டியதாக புராணங்கள் சொல்கின்றன.

இதன் பாவனையாகவே நாமும் தலையிலே கொட்டி, தோப்புக்கரணமிட்டு விநாயகரை வணங்குகின்றோம். விநாயகரை வணங்கி ஆரம்பிக்கின்ற வேலைகள் யாவும் தடையின்றி நிறைவு பெறும் என்பதனால்தான் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் விநாயகர் வழிபாட்டினை முதலில் துவங்கி விட்டு பின்னர் காரியங்களை நடத்த துவங்குகிறோம்.