×

கடைகளில் விஷமாகும் திண்பண்டங்கள்! தமிழகம் முழுவதும் அதிரடி!

சுவாசிக்கும் காற்றில் கலப்படம் இருக்கிறது. குடிக்கும் நீரில் கலப்படம் இருக்கிறது. குழந்தைகளுக்கான பாலில் கலப்படம் இருக்கிறது. சத்துக்கள் என்று தேடித் தேடி வாங்கி சமைக்கும் காய்கறிகளில் கலப்படம் இருக்கிறது. விரைவில் தமிழ்நாடு கலப்பட மாநிலமாக பெயர் வாங்கி, வாழ்வதற்கே தகுதியற்ற மாநிலமாக வருங்காலத்தில் உருவாகி விடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது சுவாசிக்கும் காற்றில் கலப்படம் இருக்கிறது. குடிக்கும் நீரில் கலப்படம் இருக்கிறது. குழந்தைகளுக்கான பாலில் கலப்படம் இருக்கிறது. சத்துக்கள் என்று தேடித் தேடி வாங்கி சமைக்கும் காய்கறிகளில்
 

சுவாசிக்கும் காற்றில் கலப்படம் இருக்கிறது. குடிக்கும் நீரில் கலப்படம் இருக்கிறது. குழந்தைகளுக்கான பாலில் கலப்படம் இருக்கிறது. சத்துக்கள் என்று தேடித் தேடி வாங்கி சமைக்கும் காய்கறிகளில் கலப்படம் இருக்கிறது. விரைவில் தமிழ்நாடு கலப்பட மாநிலமாக பெயர் வாங்கி, வாழ்வதற்கே தகுதியற்ற மாநிலமாக வருங்காலத்தில் உருவாகி விடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது

சுவாசிக்கும் காற்றில் கலப்படம் இருக்கிறது. குடிக்கும் நீரில் கலப்படம் இருக்கிறது. குழந்தைகளுக்கான பாலில் கலப்படம் இருக்கிறது. சத்துக்கள் என்று தேடித் தேடி வாங்கி சமைக்கும் காய்கறிகளில் கலப்படம் இருக்கிறது. விரைவில் தமிழ்நாடு கலப்பட மாநிலமாக பெயர் வாங்கி, வாழ்வதற்கே தகுதியற்ற மாநிலமாக வருங்காலத்தில் உருவாகி விடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளிக் குழந்தைகளும், வளர்ந்த பெரியவர்களும் ஆசை ஆசையாய் வாங்கிச் சாப்பிடும் திண்பண்டங்களில் கலப்படமும், பல ஊர்களுக்கு காலாவதியான திண்பண்டங்களை விற்பனைக்கு அனுப்பி வைத்ததையும் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். 

இந்நிலையில், மதுரை முனிசாலை பகுதிகளில் பள்ளி மாணவர்களுக்கு புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களை அனுமதியின்றி விற்பனை செய்து வருவதாக பொதுமக்களிடம் இருந்து உணவு பாதுகாப்புத் துறைக்கு தொடர்ந்து தகவல்கள் வந்தன. அதன் அடிப்படையில் அந்த பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர்களின் சோதனையில் தடை செய்யப்பட்ட பான்மசாலா போன்ற புகையிலைப் பொருட்களுடன் எப்போதோ காலாவதியான, சாப்பிடுவதற்கு தகுதியே இல்லாத பிஸ்கட், முறுக்கு, சிப்ஸ், தேன்மிட்டாய், கடலை மிட்டாய், பெரிய பெரிய நிறுவனங்களின் சாக்லேட் வகைகள் போன்ற பொருட்களை எல்லாம் மலை போல் குவித்து வைத்து, தமிழகம் முழுவதும் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்து வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. அதிரடியாக களத்தில் இறங்கிய அதிகாரிகள் அந்த குறிப்பிட்ட கடையில் இருந்து மட்டும் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான விஷமாகிப் போயிருந்த உணவுப் பொருட்களை கைப்பற்றினார்கள்.
அதன் பிறகு மதுரையைச் சுற்றியுள்ள இதுபோன்ற பெரிய கடைகளில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

சுமார் 200-க்கும் மேற்பட்ட கடைகளில் இது போன்ற காலாவதியான உணவு பொருட்களை பிற சில்லறைக் கடைகளுக்கு விற்பனை செய்யப்படுவதைக் கண்டு அதிர்ந்தனர். இந்த மாதிரியான காலாவதியான, கலப்பட உணவுப் பொருட்களை சிறிய கடைகள், பெரிய பெரிய வணிக நிறுவனங்கள், மல்டி ஸ்டோர் நிறுவனங்கள் என்கிற வித்தியாசம் இல்லாமல் அனைத்து விதமான கடைகளிலுமே இப்படி கலப்படமான, காலவாதியான உணவு பொருட்களை விற்று வருவதாகவும், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து உணவுப் பொருட்களை வாங்குமாறும் எச்சரிக்கை விடுத்து, இது குறித்து உணவு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரி கூட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்