×

ஓபிஎஸ் உடன் பா.ரஞ்சித் சந்திப்பு! அடுத்த கணமே #நமக்குஎதிரானஅரசு என ட்விட்டரில் பதிவு

சென்னை தீவுத்திடல் அருகே காந்திநகர் குடிசைவாழ் மக்களை வெளியேற்ற இயக்குனர் பா.ரஞ்சித் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கூவம் ஆற்றில் இறங்கி 13 பேர் உயிர் விடுவோம் எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நேரில் சந்தித்த இயக்குனர் பா.இரஞ்சித் அவர்களுக்கு ஆறுதல் கூறியதையடுத்து அவர்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து 13 பேரும் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து, தலித் மக்களுக்கு தங்களின் வாக்குகள் மட்டுமே ஆயுதம் என்றும் வருகிற தேர்தலில் தலித் மக்களுக்கு யார் துணையாக இருக்கிறார்களோ, அவர்களுக்கு எங்களுடைய ஆதரவு என்று ஒட்டுமொத்த
 

சென்னை தீவுத்திடல் அருகே காந்திநகர் குடிசைவாழ் மக்களை வெளியேற்ற இயக்குனர் பா.ரஞ்சித் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கூவம் ஆற்றில் இறங்கி 13 பேர் உயிர் விடுவோம் எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நேரில் சந்தித்த இயக்குனர் பா.இரஞ்சித் அவர்களுக்கு ஆறுதல் கூறியதையடுத்து அவர்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து 13 பேரும் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து, தலித் மக்களுக்கு தங்களின் வாக்குகள் மட்டுமே ஆயுதம் என்றும் வருகிற தேர்தலில் தலித் மக்களுக்கு யார் துணையாக இருக்கிறார்களோ, அவர்களுக்கு எங்களுடைய ஆதரவு என்று ஒட்டுமொத்த மக்களும் கோரிக்கை விடுப்போம் என்றும் சூளுரைத்தார். வாக்குக்காக மட்டும் வருகிற அரசியல் கட்சிகள் எங்கள் பாதிப்புக்கு ஏன் வருவதில்லை மக்களின் அழுகைக்கு உங்களின் பதில் என்ன? என்றும் அரசிடம் கேள்வி எழுப்பி தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.

தொடர்ந்து தீவுத்திடல் குடியிருப்பு அகற்றம் தொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உடன் இயக்குநர் பா.ரஞ்சித் சந்தித்து பேசினார்.

அதற்கு அடுத்த கணேமே பா. ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், “சத்தியவாணி முத்து நகர் குடிசை வாழ் மக்களின் இடப்பெயர்வு குறித்து நாம் வைத்த கோரிக்கையை பரிசீலிப்பதாக சொல்லிவிட்டு, மறு கணமே மக்களை அப்புறப்படுத்த ஆணையிட்ட துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள். விழித்துக் கொள்ளுங்கள் சென்னை வாழ் குடிசைப்பகுதி மக்களே இந்த அரசு #நமக்குஎதிரானஅரசு” எனக் குறிப்பிட்டுள்ளார்.