×

ஓடியாங்க ஓடியாங்க! அமெரிக்காவிலிருந்து முதலீடுகளை அள்ளிவரும் எடப்பாடியார்!

Jean Martin, Aquil Systems, Scitus Pharma, Nurray Chemicals, Jogo Health, Emerson உள்ளிட்ட 16 நிறுவனங்கள் 2,780 கோடி ரூபாய் முதலீடு செய்து தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம் 20,000க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் மேளதாளத்தோடு உலக முதலீட்டாளர்களை வரவேற்றும் எவ்வளவு முதலீடு வந்தது என்ற கணக்கு இன்னமும் வரவில்லை. அடுத்து கடந்த ஜனவரியில் எடப்பாடியார் தலைமையில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டிலும் லட்சகணக்கான கோடி ரூபாய்கள்
 

Jean Martin, Aquil Systems, Scitus Pharma, Nurray Chemicals, Jogo Health, Emerson உள்ளிட்ட 16 நிறுவனங்கள் 2,780 கோடி ரூபாய் முதலீடு செய்து தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம் 20,000க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் மேளதாளத்தோடு உலக முதலீட்டாளர்களை வரவேற்றும் எவ்வளவு முதலீடு வந்தது என்ற கணக்கு இன்னமும் வரவில்லை. அடுத்து கடந்த ஜனவரியில் எடப்பாடியார் தலைமையில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டிலும் லட்சகணக்கான கோடி ரூபாய்கள் முதலீடு செய்யப்படும் என்று அறிவிப்பு வந்தது. “அப்படியா, சந்தோசம், எவ்வளவு வந்தது என ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள்” என எதிர்கட்சிகள் கேட்டதற்கு, ’பஸ் பாஸ் ரினியூ பண்ணிட்டு வந்தர்றேன்’ என சொல்லி கழன்றுகொண்டன அதிகார மையங்கள். முதலீடுகள் வந்தது என அரசு சொல்வதும், சிம்புவை வைத்து படம் ஆரம்ப்பிகிறேன் என தயாரிப்பாளர்கள் சொல்வதையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்கப்பட்டது. ’முதலீடு வேணும்னா அவுங்க இங்க வரமாட்டாங்க, நாமதான் அங்க போவோணும் கண்ணு’ என முதல்வருக்கு ஏதோ ஒரு நல்ல அதிகாரி அறிவுரை வழங்கியிருப்பார் போல. கிளம்பிவிட்டது எடப்பாடி சிங்கம் தன் படை பராக்கிரமங்களோடு!

துபாய், லண்டன் என உலகை கோட்டு சூட்டுடன் சும்மா டக்கராக வலம்வந்த எடப்பாடியார், இப்போது லேண்ட் ஆகியிருப்பது அமெரிக்காவில். நியுயார்க் நகரில் நடந்த மாநாட்டில் 200க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் ஏற்கெனவே முதலீடு செய்துள்ள கேட்டர்பில்லர், ஃபோர்ட் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டு தமிழகத்தில் தங்கள் நிறுவனங்களுக்கு கிடைத்த சிறப்பான அனுபவத்தை எடுத்துக் கூறினர். கூட்டத்தின் முடிவில் Jean Martin, Aquil Systems, Scitus Pharma, Nurray Chemicals, Jogo Health, Emerson உள்ளிட்ட 16 நிறுவனங்கள் 2,780 கோடி ரூபாய் முதலீடு செய்து தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம் 20,000க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.