×

ஒருநாள் தலைமை ஆசிரியையான அரசு பள்ளி மாணவி!

அரசுப் பழங்குடியின உண்டு உறைவிட பள்ளியில் பழங்குடியின மாணவர்கள் மற்றும் இதர மாணவர்களும் படித்து வருகின்றனர் அரசுப்பள்ளி மாணவி ஒருவருக்கு பள்ளியின் தலைமையாசிரியை பொறுப்பு ஒரு நாள் வழங்கப்பட்டுக் கவுரவிக்கப்பட்டது. நீலகிரி மாவட்ட கூடலூர் அருகேயுள்ள முக்கட்டி பகுதியில் அரசுப் பழங்குடியின உண்டு உறைவிட பள்ளியில் பழங்குடியின மாணவர்கள் மற்றும் இதர மாணவர்களும் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நேற்று மாணவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்தோடு, மாணவி தர்ஷினி என்பவரை ஒருநாள் பொறுப்பு தலைமையாசிரியையாக
 

அரசுப் பழங்குடியின உண்டு உறைவிட பள்ளியில் பழங்குடியின மாணவர்கள் மற்றும் இதர மாணவர்களும் படித்து வருகின்றனர்

அரசுப்பள்ளி  மாணவி ஒருவருக்கு பள்ளியின் தலைமையாசிரியை பொறுப்பு ஒரு நாள் வழங்கப்பட்டுக் கவுரவிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்ட கூடலூர் அருகேயுள்ள முக்கட்டி பகுதியில் அரசுப் பழங்குடியின உண்டு உறைவிட பள்ளியில் பழங்குடியின மாணவர்கள் மற்றும் இதர மாணவர்களும் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நேற்று மாணவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்தோடு, மாணவி தர்ஷினி என்பவரை ஒருநாள் பொறுப்பு தலைமையாசிரியையாக அறிவித்தனர். 

பின்பு மாணவியை ஆசிரியர்கள் தலைமையாசிரியை இருக்கையில் அமர வைத்து,தங்களின் குறைகள் மற்றும் பள்ளியின்  தேவைகள் ஆகியவற்றைக் கூறினர். ஒருநாள் தலைமையாசிரியை பொறுப்பு வகித்த மாணவியும்  குறைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். இந்த சம்பவம் மற்ற மாணவர்கள் மத்தியில் கூடுதல் மகிழ்ச்சியைத் தந்தது குறிப்பிடத்தக்கது.