×

ஏப்ரல் 3 ஆம் தேதி வரை சென்னை பாஸ்போர்ட் அலுவலகங்கள் செயல்படாது!

கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக, மக்கள் கூட்டத்தை தவிர்க்குமாறு மத்திய அரசும் மாநில அரசும் வலியுறுத்தி வருகின்றன. கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக, மக்கள் கூட்டத்தை தவிர்க்குமாறு மத்திய அரசும் மாநில அரசும் வலியுறுத்தி வருகின்றன. அதனை கருத்தில் கொண்டு அனைத்து வணிக வளாகங்கள் , பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன . அதே போல கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் பொருட்டு வரும் 23 ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி
 

கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக, மக்கள் கூட்டத்தை தவிர்க்குமாறு மத்திய அரசும் மாநில அரசும் வலியுறுத்தி வருகின்றன.

கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக, மக்கள் கூட்டத்தை தவிர்க்குமாறு மத்திய அரசும் மாநில அரசும் வலியுறுத்தி வருகின்றன. அதனை கருத்தில் கொண்டு அனைத்து வணிக வளாகங்கள் , பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன . அதே போல கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் பொருட்டு வரும் 23 ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை முழு அளவுடன் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சளி, காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறி இருப்பவர்கள் பாஸ்போர்ட் சேவை மையங்கள் அல்லது அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்களுக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அவசர தேவைகள் இருப்பவர்கள் மட்டும் மையங்களுக்கு வரலாம் என்றும் ஏற்கனவே அழைப்பு விடுக்கபட்ட விண்ணப்பதாரர்கள் மட்டும் ஏப்ரல் 3 ஆம் தேதிக்கு பிறகு தங்களது வருகை தேதியை மாற்றியமைத்துக் கொண்டு வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பான முழு  விவரங்களையும் அறிந்து கொள்ள 044-28513639, 044-28513640 ஆகிய தொலைபேசி எண்ணிலும், rpo.chennai@mea.gov.in என்ற இமெயில் முகவரி மூலமாகவும் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கபட்டுள்ளது.