×

எமனின் அசுப பார்வையில் இருந்து தப்பிப்பது எப்படி?

நவராத்திரி வழிபாடும் அதன் முக்கியத்துவங்களை பற்றியும் இந்த பதிவில் மிகவும் விரிவாக பார்போம் நவராத்திரி காலங்களில் முப்பெரும் தேவியரை வழிபாடு செய்வதன் மூலம் சகல நன்மைகளையும் பெறலாம் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அம்மனை வழிபடும் விழாக்கள் ஏராளமாக இருந்தாலும், தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் அம்பாளை பூஜிக்கும் நவராத்திரியானது அதில் முக்கியத்துவம் பெறுகிறது.புரட்டாசி வளர்பிறை பிரதமை திதியில் தொடங்கி ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படும். 10-வது நாளான தசமி அன்று விஜயதசமி விழா நடைபெறும்.
 

 நவராத்திரி வழிபாடும் அதன் முக்கியத்துவங்களை பற்றியும் இந்த பதிவில் மிகவும் விரிவாக பார்போம்

நவராத்திரி காலங்களில் முப்பெரும் தேவியரை வழிபாடு செய்வதன் மூலம் சகல நன்மைகளையும் பெறலாம் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.  

அம்மனை வழிபடும் விழாக்கள் ஏராளமாக இருந்தாலும், தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் அம்பாளை பூஜிக்கும் நவராத்திரியானது அதில் முக்கியத்துவம் பெறுகிறது.புரட்டாசி வளர்பிறை பிரதமை திதியில் தொடங்கி ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படும். 10-வது நாளான தசமி அன்று விஜயதசமி விழா நடைபெறும்.

மகிஷாசுரனுடன் ஒன்பது நாட்கள் போரிட்ட அம்பாள், பத்தாவது நாளான தசமி அன்று வெற்றி பெற்றார். வீட்டில் 10 நாட்கள் தொடர்ச்சியாக நடத்தப்படும் ஒரே விழாவான நவராத்திரி விழா,வீடுகளில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவம் என்று கூறினால் அது மிகையாகாது.

சித்திரை, புரட்டாசி ஆகிய இரு மாதங்களையும் எமனின் கோரப் பற்கள் என்று கூறுவார்கள். இந்த இரு மாதங்களிலும் பிணிகள் உடலை துன்புறுத்தி, நலிவடையும்படி செய்யும்.

அதனைப் போக்கும் விதமாகவே சக்தி வழிபாடு உள்ளது. சித்திரை மாதத்தில் வசந்த நவராத்திரியும், புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும் கொண்டாடப்படுகிறது. இதில் சாரதா நவராத்திரி அனைவரும் கொண்டாடும் தனிச் சிறப்பு பெற்றது.

லட்சுமிதேவி, அலமேலுமங்கை என்ற நாமத்துடன் பிறந்து, திருப்பதி வெங்கடேசப் பெருமாளை அடையும் பொருட்டு ஒன்பது நாட்கள் விரதம் இருந்து பெருமாளை அடைந்ததாக ஒரு கதையுண்டு.

அதன் காரணமாகவே இந்த நவராத்திரி விழா கொண்டாடப்படுவதாகவும் கூற்று உள்ளது. இத்தகைய பெருமைகள் வாய்ந்த நவராத்திரி விழாவினை உண்மையான பக்தியுடன் கொண்டாடுபவர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கும்.