×

‘என் மகனைக் காப்பாற்ற முடியாமல் துடிச்சேன்’ : மாஞ்சா நூல் அறுத்து இறந்த குழந்தையின் தந்தை கதறல்..!

செல்லும் வழியில் எங்கிருந்தோ வந்த மாஞ்சா கயிறு அபி நவ்வின் கழுத்தை அறுத்தது. சென்னை கொருக்குப்பேட்டையில், கோபால் என்பவர் தன் மகன் அபிநவ்வை விளையாட வைப்பதற்காக பைக்கில் வெளியே அழைத்துச் சென்றார். செல்லும் வழியில் எங்கிருந்தோ வந்த மாஞ்சா நூல் அபி நவ்வின் கழுத்தை அறுத்தது. மாஞ்சா நூல் அறுத்த உடனே, குழந்தை அபிநவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். அதன் பின், சிறுவனின் உடலை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி பிரேதப் பரிசோதனை நடந்த பின் அவனது உடல் பெற்றோரிடம்
 

செல்லும் வழியில் எங்கிருந்தோ வந்த மாஞ்சா கயிறு அபி நவ்வின் கழுத்தை அறுத்தது.

சென்னை கொருக்குப்பேட்டையில், கோபால் என்பவர் தன் மகன் அபிநவ்வை விளையாட வைப்பதற்காக பைக்கில் வெளியே அழைத்துச் சென்றார். செல்லும் வழியில் எங்கிருந்தோ வந்த மாஞ்சா நூல் அபி நவ்வின் கழுத்தை அறுத்தது. மாஞ்சா நூல் அறுத்த உடனே, குழந்தை அபிநவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். அதன் பின், சிறுவனின் உடலை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி பிரேதப் பரிசோதனை நடந்த பின் அவனது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்டது.

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியானதை கண்ட அனைவரின் மனமும் பதைபதைத்தது. மாஞ்சா நூல் வைத்து பட்டம் விடத் தடை விதிக்கப் பட்டதையும் மீறி பட்டம் விட்டு, அபிநவ் உயிரிழந்தது பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, மாஞ்சா நூல் பயன்படுத்திய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

இது குறித்துப் பேசிய அபிநவ்வின் தந்தை கோபால், விளையாட வைப்பதற்காக அவனை அழைத்துச் சென்றேன். ஆனால், அந்த மாஞ்சா நூல் என் மகனின் உயிரைப் பறிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கு அவன் ஒரே மகன். ரொம்ப சுட்டி பையன். அவனை தினமும் விளையாட விட்டுட்டு நானும் என் மனைவியும் உட்கார்ந்து ரசிப்போம். என் கண் முன்னாடியே துடிச்சு இறந்த என் மகனைக் காப்பற்ற முடியாமல் துடிச்சேன். இந்த நிலைமை வேற யாருக்கும் வரக் கூடாது. இதுவே கடைசியா இருக்கட்டும். இனிமேல் மாஞ்சா நூலால் எந்த குழந்தையும் இறக்காமல் இருக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழுது கொண்டே கூறியுள்ளார்.