×

என் பெயரில் உள்ள டிவிட்டர் கணக்குகள் போலியானவை: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்!

சந்திரயான் 2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் லேண்டர் விக்ரமின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. டிவிட்டரில் தனது பெயரில் உலா வரும் கணக்குகள் போலியானவை என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். சந்திரயான் 2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் லேண்டர் விக்ரமின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் விஞ்ஞானிகள் மட்டுமில்லாது ஒட்டுமொத்த இந்தியாவும் சோகத்தில் மூழ்கியது. இருப்பினும் தற்போது விக்ரம் லேண்டர் எங்குள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரோ கூறியுள்ளது. மேலும் இதுகுறித்து உடனடி
 

சந்திரயான் 2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் லேண்டர் விக்ரமின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

டிவிட்டரில் தனது பெயரில் உலா வரும் கணக்குகள் போலியானவை என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். 

சந்திரயான் 2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் லேண்டர் விக்ரமின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் விஞ்ஞானிகள் மட்டுமில்லாது ஒட்டுமொத்த இந்தியாவும் சோகத்தில் மூழ்கியது. இருப்பினும் தற்போது விக்ரம் லேண்டர் எங்குள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரோ கூறியுள்ளது. மேலும் இதுகுறித்து உடனடி தகவல்களைப் பெற பலரும் இஸ்ரோ மற்றும் இஸ்ரோ தலைவர் சிவனின் டிவிட்டர் கணக்கைத் தேடி வருகின்றனர். ஆனால்  சிவன் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகள் உள்ளது வலைதளவாசிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிவன், டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் தனது பெயரில் உலா வரும் கணக்குகள் போலியானவை. தனக்கு அதிகாரப்பூர்வமான எந்த கணக்கும் டிவிட்டரில் இல்லை’ என்று விளக்கமளித்துள்ளார். இருப்பினும் இஸ்ரோவுக்கு அதிகாரப்பூர்வ  டிவிட்டர் கணக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.