×

ஊரடங்கை மீறியதாக 532 பேரை கைது செய்த மதுரை போலீஸ்!

கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைந்து கொண்டே செல்கிறது. அரசு திடீர் திடீரென்று புது அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை திகிலடையச் செய்கிறது. இதனால், பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பொருட்களை வாங்க அல்லாடுகின்றனர். ஊரடங்கை மீறியதாக நேற்று ஒரு நாள் மட்டும் 532 பேரை மதுரை போலீசார் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும்
 

கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைந்து கொண்டே செல்கிறது. அரசு திடீர் திடீரென்று புது அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை திகிலடையச் செய்கிறது. இதனால், பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பொருட்களை வாங்க அல்லாடுகின்றனர்.

ஊரடங்கை மீறியதாக நேற்று ஒரு நாள் மட்டும் 532 பேரை மதுரை போலீசார் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைந்து கொண்டே செல்கிறது. அரசு திடீர் திடீரென்று புது அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை திகிலடையச் செய்கிறது. இதனால், பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பொருட்களை வாங்க அல்லாடுகின்றனர்.
இந்த நிலையில் மதுரையில் ஊரடங்கை மீறி பொது இடங்களில் சுற்றித் திரிபவர்களைக் கைது செய்யும்படி மாநகர கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டார். இதனால், மதுரை நகரில் மட்டும் 2500க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நான்கு நாட்கள் முழு ஊரடங்கு முடிந்த நிலையில் பொருட்களை வாங்க மக்கள் போட்டிப் போட்டுக்கொண்டு கடைகளில் குவிந்தனர். 

சமூக இடைவெளி இன்றி செயல்பட்ட கடை உரிமையாளர்கள், பொது மக்கள், தகுந்த காரணமின்றி சாலையில் சுற்றித் திறந்தவர்கள் என்று மொத்தம் 112 பேர் கைது செய்யப்பட்டனர். 93 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை மாநகர் தவிர்த்து மாவட்டம் முழுவதும் 420 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 155 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 
ஊரடங்கு பிறப்பித்ததிலிருந்து நேற்று வரை மதுரை மாவட்டம் முழுவதும் ஊரடங்கை மீறியதாக 9730 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 13,102 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5,063 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.