×

ஊரடங்கு விளைவு – ஸ்மார்ட்போன், டெலிவிஷன் பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு

ஊரடங்கு காரணமாக ஸ்மார்ட்போன், டெலிவிஷன் பயன்பாடு கணிசமாக அதிகரித்திருப்பதாக சமீப ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னை: ஊரடங்கு காரணமாக ஸ்மார்ட்போன், டெலிவிஷன் பயன்பாடு கணிசமாக அதிகரித்திருப்பதாக சமீப ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக ஏப்ரல் 14-ஆம் தேதி வரை பிரதமர் ஊரடங்கு பிறப்பித்துள்ளார். இதனால் நாடு முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே வருகின்றனர். ஆனால் சிலர் ஊரடங்கை மதிக்காமல் தேவையின்றி வெளியே சுற்றிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு போக்குவரத்து
 

ஊரடங்கு காரணமாக ஸ்மார்ட்போன், டெலிவிஷன் பயன்பாடு கணிசமாக அதிகரித்திருப்பதாக சமீப ஆய்வில் தெரியவந்துள்ளது.

சென்னை: ஊரடங்கு காரணமாக ஸ்மார்ட்போன், டெலிவிஷன் பயன்பாடு கணிசமாக அதிகரித்திருப்பதாக சமீப ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஏப்ரல் 14-ஆம் தேதி வரை பிரதமர் ஊரடங்கு பிறப்பித்துள்ளார். இதனால் நாடு முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே வருகின்றனர். ஆனால் சிலர் ஊரடங்கை மதிக்காமல் தேவையின்றி வெளியே சுற்றிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு போக்குவரத்து காவலர்களும், காவல் அதிகாரிகளும் தகுந்த பாடம் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருப்பதால் ஸ்மார்ட்போன், டெலிவிஷன் பயன்பாடு கணிசமாக அதிகரித்திருப்பதாக நீல்சன் நிறுவன ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

ஊரடங்கு தொடங்கிய முதல் வாரத்தில் தமிழகத்தில் டெலிவிஷன் பயன்பாடு 44 சதவீதம் அதிகரித்துள்ளது. பழைய விளையாட்டு போட்டிகளின் மறுஒளிபரப்பு காரணமாக 21 சதவீதம் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் பிரைம் டைம் அல்லாத நேரங்களில் 43 சதவீதமும், பிரைம் டைமில் 11 சதவீதமும் டெலிவிஷன் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதேபோல திரைப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 89 சதவீதம் உயர்ந்துள்ளது.

டெலிவிஷன் பயன்பாடு போலவே ஸ்மார்ட்போன் பயன்பாடும் தமிழகத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது. ஊரடங்கு தொடங்கிய முதல் வாரத்தில் 12.5 சதவீதம் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆன்லைனில் தொடர்கள், திரைப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 97 சதவீதம் அதிகரித்துள்ளது. ஸ்மார்ட்போனில் கேம் விளையாடுபவர்கள் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது.