×

ஊரடங்கு முடியும் வரை இலவசம் தான் : அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா அச்சத்தால் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், பல மாநிலங்களில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மத்திய அரசின் முடிவே செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை
 

ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா அச்சத்தால் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், பல மாநிலங்களில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மத்திய அரசின் முடிவே செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் வரை அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்றும் மக்கள் உணவு வாங்கும் போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.