×

ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்ற செய்தி தவறானது: காவல்துறை விளக்கம்!

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 611 ஆக உயர்ந்துள்ள நிலையில் பலியோனோர்களின் எண்ணிக்கையானது 6 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா வேகம் காட்டி வருகிறது. இதனால் மாநிலங்களிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இந்தியாவில் கொரோனா வைரசுக்கு 4,281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 111 பேர் பலியாகி உள்ளனர். இதனால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு வரும் 14 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 611 ஆக உயர்ந்துள்ள நிலையில்
 

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 611 ஆக உயர்ந்துள்ள நிலையில் பலியோனோர்களின் எண்ணிக்கையானது 6 ஆக அதிகரித்துள்ளது. 

இந்தியாவிலும் கொரோனா வேகம் காட்டி வருகிறது. இதனால் மாநிலங்களிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இந்தியாவில் கொரோனா வைரசுக்கு 4,281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 111 பேர் பலியாகி உள்ளனர். இதனால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு வரும் 14 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 611 ஆக உயர்ந்துள்ள நிலையில் பலியோனோர்களின் எண்ணிக்கையானது 6 ஆக அதிகரித்துள்ளது. 

இதனிடையே ஊரடங்கை மதிக்காமல் மக்கள் தேவையின்றி வெளியில் நடமாடினால்  ஊரடங்கு உத்தரவு இன்னும் கடுமையாக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை விடுத்தார். இதனால் தமிழ்நாட்டில் ஊரடங்கு நீடிக்கப்படவுள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளியாகின. 

இந்நிலையில் இதுகுறித்து கூறியுள்ள தமிழக காவல்துறை, “நாடு தழுவிய ஊரடங்கு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படுமென, உலக சுகாதார நிறுவனத்தின் பெயரில் பரப்பப்படும் செய்திகள் தவறானவை. இதுபோன்ற பொய்யான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம்”  என்று கூறியுள்ளது.