×

ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றியதாக 17, 000 பேர் கைது!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது 199 நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்தியாவில் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1000 ஐ நெருங்கியுள்ளது. இதனால் நாடு முழுவதும் 14 ஆம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் என போலீசார் கூறிவருகின்றனர். அதையும் மீறி சிலர்
 

சீனாவில் உருவான  கொரோனா வைரஸ் தற்போது  199  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்தியாவில் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1000 ஐ நெருங்கியுள்ளது. இதனால் நாடு முழுவதும் 14 ஆம் தேதி வரை 21  நாட்கள் ஊரடங்கை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு   வெளியில்  வர வேண்டாம் என போலீசார் கூறிவருகின்றனர். அதையும் மீறி சிலர் பைக்குகளில் சுற்றி வந்து கூடுதல் பணி சுமையை போலீசாருக்கு தருகிறார்கள். 

இந்நிலையில் அரசின் உத்தரவை மீறி வெளியே சுற்றியதாக 17 ஆயிரத்து 668 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 ஆயிரத்து 815 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் இருந்து 11 ஆயிரத்து 565 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. உத்தரவை மீறி கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.