×

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி உயிரிழந்த முதியவர்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 743 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்திலும் கொரோனா அதிவேகமாக பரவி வருவதால் கொரோனா அறிகுறி இருப்பவர்கள் தனிமை படுத்தப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்கள் மூலமாகவே கொரோனா அதிகமாக பரவும் நிலையில், அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன் படி, தமிழகத்தில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் மதுரை மாவட்டம்
 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 743 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்திலும் கொரோனா அதிவேகமாக பரவி வருவதால் கொரோனா அறிகுறி இருப்பவர்கள் தனிமை படுத்தப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்கள் மூலமாகவே கொரோனா அதிகமாக பரவும் நிலையில், அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன் படி, தமிழகத்தில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கோஸ்ராவுத்தர் தெருவைச் சேர்ந்த பாண்டி என்ற ஆதரவற்ற முதியவர், உசிலம்பட்டி காளியம்மன் கோவில் அருகே படுத்திருந்து அருகில் யாராவது உணவு வழங்கினால் அதை உண்டு உயிர் வாழ்ந்து வந்ததார். இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால் இரு நாட்களாக உணவின்றி தவித்து வந்த இன்று மாலை முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.