×

ஊரடங்கால் தவிக்கும் விவசாயிகள்.. விளைபொருட்களை விற்க உதவி எண்கள் இதோ!

விளைபொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்து கொள்ள வேண்டும் என்று அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். கொரோனாவில் இருந்து மக்களை காக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தினக்கூலிக்கு வேலை செய்பவர்களும், விவசாயிகளும் விளைய வைத்த பயிர்களை என்ன செய்வதென்று அறியாது திணறி வருகின்றனர். ஊரடங்கு அமலில் இருப்பதால், விவசாயிகள் விளைய வைத்த பொருட்களை மார்கெட்டுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமலும் தவித்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு அரசு
 

 விளைபொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்து கொள்ள வேண்டும் என்று அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கொரோனாவில் இருந்து மக்களை காக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தினக்கூலிக்கு வேலை செய்பவர்களும், விவசாயிகளும் விளைய வைத்த பயிர்களை என்ன செய்வதென்று அறியாது திணறி வருகின்றனர்.

ஊரடங்கு அமலில் இருப்பதால், விவசாயிகள் விளைய வைத்த பொருட்களை மார்கெட்டுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமலும் தவித்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். அதே போல இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில்,  விளைபொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்து கொள்ள வேண்டும் என்று அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன் படி விவசாயிகளிடம் இருந்து அரசே நேரடியாக பொருட்களை கொள்முதல் செய்ய முடிவெடுத்துள்ளது. இந்த சோதனையான காலத்தில் விளைபொருட்களை விற்க விவசாயிகள் சிரமங்களை அறிந்து,  இன்னல்களை நீக்க விவசாயிகளுக்கு உற்ற தோழனாக உதவ அரசு முன் வந்துள்ளது. விவசாயிகள் விளைபொருட்களை விற்க கீழ்க்கண்ட உதவி மைய எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.