×

ஊரடங்கால் 200 கி.மீ நடந்தே வந்த நபர்.. உணவளித்து மருத்துவமனையில் சேர்த்த போலீசார்!

ஒரு சிலரோ சைக்கிள் மூலமாகவோ அல்லது நடந்தோ அவரவர் ஊருக்கு செல்கின்றனர். கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது. போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளதால் வெளிமாநிலங்களில் சிக்கியுள்ளவர்கள் பலர் உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலரோ சைக்கிள் மூலமாகவோ அல்லது நடந்தோ அவரவர் ஊருக்கு செல்கின்றனர். இந்நிலையில் பெரம்பலூரிலும் ஒருவர் 200 கி.மீ நடந்தே
 

ஒரு சிலரோ சைக்கிள் மூலமாகவோ அல்லது நடந்தோ அவரவர் ஊருக்கு செல்கின்றனர்.

கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது. போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளதால் வெளிமாநிலங்களில் சிக்கியுள்ளவர்கள் பலர் உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலரோ சைக்கிள் மூலமாகவோ அல்லது நடந்தோ அவரவர் ஊருக்கு செல்கின்றனர். இந்நிலையில் பெரம்பலூரிலும் ஒருவர் 200 கி.மீ நடந்தே வந்த சம்பவம் நடந்துள்ளது. 

பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியே சோர்வாக நடந்து வந்து கொண்டிருந்த நபரை பார்த்து, அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவர் தன் பெயர் பாண்டியராஜன் என்றும் திண்டுக்கல்லில் இருந்து 200கி.மீ தூரம் நடந்தே வருவதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து அவர் பசியோடு இருந்ததை உணர்ந்த போலீசார், உணவு வாங்கிக் கொடுத்து சாப்பிட வைத்துள்ளனர். மேலும், அவர் மிக்க சோர்வுடன் காணப்பட்டதால் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அவரை ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்துள்ளனர்.