×

உயிரிழந்த மருத்துவரின் குடும்பத்துக்கு முதல்வர் பழனிசாமி ஆறுதல்!

விதவையாக 2 குழந்தைகளுடன் இருக்கும் எனக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கொரோனா சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குராக இருந்த மருத்துவர் சைமனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு ஏற்கனவே சிறுநீரக கோளாறு காரணமாக, டயாலிசிஸ் செய்யப்பட்டிருந்த நிலையில், கொரோனா சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 19 ஆம் தேதி உயிரிழந்தார். பின்னர் அவரது உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு கிளம்பிய பெரும் அதிர்ச்சியை
 

விதவையாக 2 குழந்தைகளுடன் இருக்கும் எனக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். 

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கொரோனா சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குராக இருந்த மருத்துவர் சைமனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு ஏற்கனவே சிறுநீரக கோளாறு காரணமாக, டயாலிசிஸ் செய்யப்பட்டிருந்த நிலையில், கொரோனா சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 19 ஆம் தேதி உயிரிழந்தார். பின்னர் அவரது உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு கிளம்பிய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  

இந்த சம்பத்துக்கு பிறகு மருத்துவர் சைமனின் மனைவி ஆனந்தி சைமன் முதல்வருக்கு கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார். அதாவது, கீழ்ப்பாக்கத்தில் கிறிஸ்துவ மதச் சடங்குகளின்படி அடக்கம் செய்யுமாறு அவர் தெரிவித்ததாகவும் அவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும் எனவும் விதவையாக 2 குழந்தைகளுடன் இருக்கும் எனக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். 

இந்நிலையில் இன்று மதியம் 12:30 மணிக்கு கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த மருத்துவர் சைமன் துணைவியார் திருமதி.ஆனந்தி சைமன் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன் என்றும் அவர்களது மகன் மற்றும் மகள் ஆகியோரின் எதிர்கால நலன் கருதி தைரியமாக இருக்கும் கேட்டுக் கொண்டேன் என்றும் முதல்வர் பழனிசாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.