×

உயர் அதிகாரிகள் துணையுடன் கடத்தப்பட்ட மதுபாட்டில்கள் : கையும் களவுமாக சிக்கிய ஊழியர்கள்!

இதுதவிர ஊரடங்கால் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் பலர் மதுபானம் இல்லாத விரக்தியில் தற்கொலை செய்து கொள்கின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் நோக்கில் வரும் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் அங்காடிகள் உள்ளிட்டவை குறிப்பிட்ட கட்டுப்பாட்டுடன் காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை மட்டுமே திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதை தவிர்த்து மற்ற நேரங்களில் வெளியில் சுற்றி திரிபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு
 

இதுதவிர ஊரடங்கால் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் பலர் மதுபானம் இல்லாத விரக்தியில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் நோக்கில் வரும் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் அங்காடிகள் உள்ளிட்டவை குறிப்பிட்ட கட்டுப்பாட்டுடன் காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை மட்டுமே திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதை தவிர்த்து மற்ற நேரங்களில் வெளியில் சுற்றி திரிபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். 

இதுதவிர ஊரடங்கால் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் பலர் மதுபானம் இல்லாத விரக்தியில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.  இதனால் கள்ளச்சாராயம் தயாரித்தல்,மாற்று போதை பொருட்களை குடிப்பது, மதுப்பானங்களை கள்ளச்சந்தையில் விற்பது என பல குற்றச்சம்பவங்கள் அரங்கேறி கொண்டிருக்கின்றன. 

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபாட்டில்களை திருமங்கலம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள மதுபான கிடங்கியில்  வைத்து சீல் வைக்கப்பட்டிருந்தது. தற்போது உயர் அதிகாரிகளின் உதவியுடன் மதுபான கடை மேற்பார்வையாளர் கடையின் விற்பனையாளர்கள் உள்பட 7 பேர் நேற்று உயர்ரக மது பாட்டில்கள் 72-ஐ உள்ளிட்ட பல மதுபாட்டில்களை கார் மற்றும் பைக்கில் கடத்தி சென்றனர். இதுகுறித்து மது விலக்கு போலீசாருக்கு தகவல் கிடைக்க சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் ஊழியர்களை கையும் களவுமாக பிடித்தனர். இதை தொடர்ந்து அவர்களிடமிருந்து மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது. 

விசாரணையில் மேற்பார்வையாளர் ஜீவானந்தம் விற்பனையாளர்கள் சிவபாண்டி, ரவி உள்பட ஏழு பேரையும் திருமங்கலம் மதுவிலக்கு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.