×

உதித் சூர்யாவிற்கு நிபந்தனை ஜாமீன்: மதுரை உயர்நீதி மன்றம் தீர்ப்பு..!

அவர்களிடம் சிபிசிஐடி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல ஆள்மாறாட்டங்கள் நடந்திருந்தது அம்பலமானது. கடந்த மாதம் உதித் சூர்யா என்ற மாணவன் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாக எழுந்த புகாரையடுத்து, உதித் சூர்யாவும் அவரது தந்தை வெங்கடேஷும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் சிபிசிஐடி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல ஆள்மாறாட்டங்கள் நடந்திருந்தது அம்பலமானது. இதனையடுத்து, ஜாமீன் வழங்கக் கோரி உதித் சூர்யாவும் அவரது தந்தை மருத்துவர் வெங்கடேஷ் சார்பில் மதுரை உயர்நீதி மன்ற
 

அவர்களிடம் சிபிசிஐடி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல ஆள்மாறாட்டங்கள் நடந்திருந்தது அம்பலமானது.

கடந்த மாதம் உதித் சூர்யா என்ற மாணவன் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாக எழுந்த புகாரையடுத்து, உதித் சூர்யாவும் அவரது தந்தை வெங்கடேஷும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் சிபிசிஐடி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல ஆள்மாறாட்டங்கள் நடந்திருந்தது அம்பலமானது. இதனையடுத்து, ஜாமீன் வழங்கக் கோரி உதித் சூர்யாவும் அவரது தந்தை மருத்துவர் வெங்கடேஷ் சார்பில் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த ஜாமீன் மனுவை இன்று விசாரித்த மதுரை உயர்நீதி மன்ற கிளை, உதித் சூர்யாவின் வயதையும் மன நிலையையும் கருத்தில் கொண்டு நிபந்தனையின் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்படுகிறது என்றும் அதன் படி உதித் சூர்யா தினமும் காலை 10:30 மணிக்கு சிபிசிஐடி காவல்துறையினர் முன் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேஷ் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி என்பதால் அவர் மூலம் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை அடையாளம் கொள்வதற்காக வெங்கடேஷுக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி அவர் அளித்த ஜாமீன் மனுவை நிராகரித்துள்ளது.