×

உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் குண்டர் சட்டம் பாயும்: காவல் ஆணையர் எச்சரிக்கை!

இதே போன்ற சம்பவம் கடந்த வாரம் நெல்லூர் மருத்துவர் உயிரிழந்த போதும் நடந்தது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கொரோனா சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக இருந்த போது மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு ஏற்கனவே சிறுநீரக கோளாறு காரணமாக, டயாலிசிஸ் செய்யப்பட்டிருந்த நிலையில், கொரோனா சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். பின்னர் அவரது உடலை கீழ்ப்பாக்கம் மயானத்தில் தகனம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரது உடல் வேலங்காடு
 

இதே போன்ற சம்பவம் கடந்த வாரம் நெல்லூர் மருத்துவர் உயிரிழந்த போதும் நடந்தது. 

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கொரோனா சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக இருந்த போது மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு ஏற்கனவே சிறுநீரக கோளாறு காரணமாக, டயாலிசிஸ் செய்யப்பட்டிருந்த நிலையில், கொரோனா சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். பின்னர் அவரது உடலை கீழ்ப்பாக்கம் மயானத்தில் தகனம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரது உடல்  வேலங்காடு இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இதே போன்ற சம்பவம் கடந்த வாரம் நெல்லூர் மருத்துவர் உயிரிழந்த போதும் நடந்தது. 

கீழ்ப்பாக்கம் மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த 20 பேரை அதிரடியாக கைது செய்தனர். மேலும், அந்த போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. மருத்துவரின் உடலை தகனம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இறந்தவர்களின் உடல் மூலம் கொரோனா வைரஸ் பரவாது என சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்தது. 

இந்நிலையில் இது குறித்து பேசிய சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் குண்டர் சட்டம் பாயும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், சென்னை கீழ்ப்பாக்கத்தில் மருத்துவரின் உடலை தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தொடர்பாக 90 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு  செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.