×

ஈரோடு அருகே பப்ஜி விளையாடிய பாலிடெக்னிக் மாணவன் மயங்கி விழுந்து மரணம்!

‘பப்ஜி’ என அழைக்கப்படும் வீடியோ கேம் போன்ற விளையாட்டு இளைஞர்கள், சிறுவர்களிடையே மிகவும் பிரபலமாகி உள்ளது.இந்த விளையாட்டு வன்முறையைத் தூண்டுவது போல் அமைந்துள்ளதாகப் பல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ‘பப்ஜி’ என அழைக்கப்படும் வீடியோ கேம் போன்ற விளையாட்டு இளைஞர்கள், சிறுவர்களிடையே மிகவும் பிரபலமாகி உள்ளது.இந்த விளையாட்டு வன்முறையைத் தூண்டுவது போல் அமைந்துள்ளதாகப் பல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரு சில கல்லூரி விடுதிகளில் தங்கி உள்ள மாணவர்கள் இந்த விளையாட்டை விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயினும்
 

 ‘பப்ஜி’ என அழைக்கப்படும் வீடியோ கேம் போன்ற விளையாட்டு இளைஞர்கள், சிறுவர்களிடையே மிகவும் பிரபலமாகி உள்ளது.இந்த விளையாட்டு வன்முறையைத் தூண்டுவது போல் அமைந்துள்ளதாகப் பல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 ‘பப்ஜி’ என அழைக்கப்படும் வீடியோ கேம் போன்ற விளையாட்டு இளைஞர்கள், சிறுவர்களிடையே மிகவும் பிரபலமாகி உள்ளது.இந்த விளையாட்டு வன்முறையைத் தூண்டுவது போல் அமைந்துள்ளதாகப் பல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  ஒரு சில கல்லூரி விடுதிகளில் தங்கி உள்ள மாணவர்கள் இந்த விளையாட்டை விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இந்த விளையாட்டைச் சிறுவர்களும், இளைஞர்களும் விளையாடுவதை நிறுத்தவில்லை. அதே சமயம் இந்த விளையாட்டு மனதளவில் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதுடன் தற்கொலை, எதிர்ப்பாராதா மரணமும் ஏற்படுத்துவதாக மனநல ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த 16 வயது பாலிடெக்னிக் மாணவன், வீட்டிற்கு அருகில்  செல்போனில் பப்ஜி கேம் விளையாடிகொண்டிருந்தான். அப்போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளான். அவருடைய செல்போனை சோதனை செய்ததில் இறுதியில் பப்ஜி கேம் விளையாடியது தெரியவந்தது. ஆக்ரோஷமாக பப்ஜி கேம் விளையாடிய போது மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். மாணவன் உயிரிழப்பு குறித்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.