×

இறந்த குழந்தையை மீண்டும் கருவாக்கி கொடுத்த சீரடி சாயி பாபா!

மகாராஷ்டிராவைச் சேர்ந்த வக்கீல் சபட்ணேகர். செல்வந்தராக வாழ்ந்து வந்த இவரின் மகன் ஒருநாள் நோயால் அவதிப்பட்டு உயிரிழந்தான். மகாராஷ்டிராவைச் சேர்ந்த வக்கீல் சபட்ணேகர். செல்வந்தராக வாழ்ந்து வந்த இவரின் மகன் ஒருநாள் நோயால் அவதிப்பட்டு உயிரிழந்தான். சபட்ணேகருக்கு உலகமே இருண்டுவிட்டது. கடவுளே இல்லை எல்லாம் பொய் என்று விரக்தியின் உச்சத்திற்கே சபட்ணேகர் சென்று விட்டார். அப்போது அவருக்கு ஆறுதல் கூறிய அவரது கல்லூரிக் காலத்தில் நண்பர் ஒருவர் சாயிநாதரை தரிசிக்க சொன்னார். அதன்படி துவாரகாமாயிக்குச் சென்று பாபாவைப்
 

மகாராஷ்டிராவைச் சேர்ந்த  வக்கீல் சபட்ணேகர். செல்வந்தராக வாழ்ந்து வந்த இவரின் மகன் ஒருநாள் நோயால் அவதிப்பட்டு உயிரிழந்தான்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த  வக்கீல் சபட்ணேகர். செல்வந்தராக வாழ்ந்து வந்த இவரின் மகன் ஒருநாள் நோயால் அவதிப்பட்டு உயிரிழந்தான். சபட்ணேகருக்கு உலகமே இருண்டுவிட்டது. கடவுளே இல்லை எல்லாம் பொய் என்று விரக்தியின் உச்சத்திற்கே சபட்ணேகர் சென்று விட்டார். அப்போது அவருக்கு ஆறுதல் கூறிய அவரது கல்லூரிக் காலத்தில் நண்பர்  ஒருவர்  சாயிநாதரை தரிசிக்க சொன்னார். அதன்படி துவாரகாமாயிக்குச் சென்று பாபாவைப் பணிந்து வணங்கினார் சபட்ணேகர். ஆனால்  பாபா கோபம் கொண்டு, ‘வெளியே போ’ என்று சத்தமிட்டார். சபட்ணேகர் வேறுவழியின்றி வெளியே வந்தார். 

சபட்ணேகர் வருத்தம் அடைந்தாலும், பாபா தன்னை ஏற்கும் நாள் என்றேனும் ஒருநாள் வரும் என்பதை அறிந்துகொண்டு வெளியேறினார். சில மாதங்களுக்குப் பிறகு சபட்ணேகரின் மனைவி அதிகாலையில் ஒரு கனவு கண்டாள். அதில், அவள் ஒரு கிணற்றடிக்குத் தண்ணீர் எடுத்துவரச் செல்கிறாள். அப்போது அங்கே தலையில் துண்டு ஒன்றைக் கட்டிக்கொண்டிருந்த பக்கிரி ஒருவர் நின்றார். அவர் அவளை நோக்கி, ‘பெண்ணே, உன் பானையைக் கொடு. நான் நீர் நிரப்பித் தருகிறேன்” என்றார். அவளோ அச்சப்பட்டுத் திரும்பி நடக்க ஆரம்பித்தபோது அவர் அவளைத் தலையில் தொட்டார்’. இதையடுத்து தூக்கம்  களைந்து எழுந்த அப்பெண்  தன் கணவரிடம் தன் அனுபவத்தைக் கூறினாள். 

நடந்தவற்றைக் கேட்ட சபட்ணேகர், அது பாபாதான் என்றும் தற்போது சென்றால் பாபா நிச்சயம் நமக்கு அருள் செய்வார் என்றும் சொல்லி சீரடிக்குக் கிளம்பினார். சபட்ணேகரின் மனைவிக்குத் தீராத இடுப்பு வலி இருந்தது. இருப்பினும் அதை பொருட்படுத்தாது சீரடிக்கு சென்றார்.  சீரடியில் பாபாவைக் கண்டதும் அவளுக்குப் பெரிய ஆனந்தம் ஏற்பட்டது.  தன் கனவில் வந்த பக்கிரி இவர்தான் என்பதை அவள் உணர்ந்துகொண்டாள். 

அப்போது பாபா, அங்கே யாரிடமோ பேசுவது போல, ‘எனக்கு நெடுநாட்களாக இடுப்புவலி இருந்தது.ஆனால்  இப்போது ஒரு நொடியில் அது சரியாகி விட்டது’ என்று சொல்லிச் சிரித்தார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த சபட்ணேகரின் மனைவிக்கு ஒரு நொடி, உடல் சிலிர்த்தது. அவள் இடுப்பிலிருந்த கடுமையான வலி முற்றிலும் குணமாகிவிட்டதை அவள் உணர்ந்தாள். அப்போது சபட்ணேகரும்  அவரது மனைவியும் பாபாவின் காலை பற்றிக் கொண்டு அழுதனர். 

பின்பு பாபா அருகில் இருந்தவர்களைப் பார்த்து, ‘ இந்த ஆள், அவரது குழந்தையை நான் கொன்று விட்டதாக என் மீது பழி சுமத்தினார். நான் என்ன குழந்தைகளைக் கொல்கிறவனா? அவரவர் முன்வினையினை அல்லவா அவர்கள் அனுபவிக்கிறார்கள்… பின் ஏன், இவர் இன்று என் கால்களைப் பற்றிக்கொண்டு அழுகிறார்? நான் வேண்டுமானால் ஒன்று செய்கிறேன். இப்போதே, அந்தக் குழந்தையை, மீண்டும் இவரின் மனைவியின் கருப்பையில் கொண்டுவைக்கிறேன்” என்று சொன்னார். 

இதைக் கேட்டதும் சபட்ணேகருக்கும்  அவரது மனைவிக்கும் மகிழ்ச்சி தாங்கவில்லை. இதையடுத்து அவர்கள் பாபாவின் ஆசியைப் பெற்றுத்  திரும்பினர். அடுத்த ஒரு வருடத்தில் அவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது.  முன்வினைப் பயன்களால் ஆனது தான்  மனித வாழ்க்கை. அதை உணராது பலர், வாழ்க்கையில் ஏதேனும் துயரம் ஏற்பட்டால் உடனே கடவுளுக்குக் கண்ணே இல்லை. ஏன்  இப்படிச் சோதிக்கிறார் என்று புலம்ப தொடங்கி விடுவார். 

ஆனால் சாயிபாபாவை ஒருவர்  சரணாகதி அடைந்து விட்டால் அந்த கணத்திலிருந்து சாயி அவரை   காக்கத் தொடங்கி விடுவார். அவன் கூடவேயிருந்து அவருக்கு அருள் புரிவார்.  அவன்  திசைமாறிச் செல்லும் போது அந்த பாதையிலிருந்து  அவனைத் திருப்புகிறார்.  சாயி பாபாவைச் சரணடையுங்கள். வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறுங்கள்.