×

இரு மாநில முதல்வர்கள் சந்திப்பு.. நதிநீர் பிரச்சனை சுமூகமாக முடிந்தது …

திருவனந்தபுரம் அடைந்த தமிழக முதல்வரை மலர்க்கொத்ததுடன் வரவேற்றார் பினராயி விஜயன். 2017 ஆம் ஆண்டு நதிநீர் குறித்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வேண்டுகோளை ஏற்றார் கேரளா முதல்வர் பினராயி விஜயன். அதன் படி, கேரள முதல்வரை சந்திக்க இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி. திருவனந்தபுரம் அடைந்த தமிழக முதல்வரை மலர்க்கொத்ததுடன் வரவேற்றார் பினராயி விஜயன். அதன் பிறகு, மஸ்கட் நட்சத்திர
 

திருவனந்தபுரம் அடைந்த தமிழக முதல்வரை மலர்க்கொத்ததுடன் வரவேற்றார் பினராயி விஜயன்.

2017 ஆம் ஆண்டு நதிநீர் குறித்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வேண்டுகோளை ஏற்றார் கேரளா முதல்வர் பினராயி விஜயன். அதன் படி, கேரள முதல்வரை சந்திக்க இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி. 

திருவனந்தபுரம் அடைந்த தமிழக முதல்வரை மலர்க்கொத்ததுடன் வரவேற்றார் பினராயி விஜயன். அதன் பிறகு, மஸ்கட் நட்சத்திர ஓட்டலில் கேரள முதல்வரும்  தமிழக முதல்வருடன் இணைந்து பல்வேறுத் துறை சம்பந்தப்பட்ட தமிழக அமைச்சர்களும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளனர். 

பரம்பிகுளம்- ஆழியாறு மற்றும் பாண்டியாறு-புன்னம்புழா உள்ளிட்ட ஆறுகளின் நீர் திறப்பு மற்றும், முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் உயர்வு உள்ளிட்ட நதிநீர் பிரச்சனைகள் பற்றி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாயின.

இதனையடுத்து , 15 ஆண்டுகளுக்கு பிறகு, கேரளா முதல்வருக்கும் தமிழக முதல்வருக்கும் இடையே நடந்த நதிநீர் குறித்த  பேச்சு வார்த்தை சுமூகமாக முடிந்தது. பேச்சு வார்த்தை முடிவடைந்த உடன், செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இரு மாநிலத்தவர்களிடையே பிரச்சனை ஏற்படாத வகையில் நதிநீரை பகிர்ந்து கொள்வதற்கு தனிக் குழு அமைக்கப் பட்டுள்ளதாகவும், பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு இரு மாநிலங்களும் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.