×

இரு நாட்டு அதிபர்களை வரவேற்கப் பள்ளி மாணவர்கள் பேரணி..

பள்ளி மாணவ, மாணவிகள் இணைந்து அர்ஜுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் பேரணி நடத்தினர். அக்டோபர் 11 மற்றும் 12 ஆம் தேதி சீன அதிபர் மற்றும் இந்தியப் பிரதமரின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்புப் பணிகளும் அவர்களை வரவேற்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர். இரு நாட்டுத் தலைவர்கள் சந்திக்கும் இந்த நிகழ்வு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும் எனவும் தமிழகமே இந்நிகழ்வால் பெருமையடையும் என திமுக தலைவர்
 

பள்ளி மாணவ, மாணவிகள் இணைந்து அர்ஜுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் பேரணி நடத்தினர். 

அக்டோபர் 11 மற்றும் 12 ஆம் தேதி சீன அதிபர் மற்றும் இந்தியப் பிரதமரின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்புப் பணிகளும் அவர்களை வரவேற்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர். இரு நாட்டுத் தலைவர்கள் சந்திக்கும் இந்த நிகழ்வு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும் எனவும் தமிழகமே இந்நிகழ்வால் பெருமையடையும் என திமுக தலைவர் ஸ்டாலின் அவரது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில், சீன அதிபரையும் இந்தியப் பிரதமரையும் வரவேற்கும் விதமாக மாமல்லபுரத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் இணைந்து அர்ஜுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் பேரணி நடத்தினர். 

இந்த பேரணியைப் பொன். ராதாகிருஷ்ணன் துவங்கி வைத்தது மட்டுமல்லாமல் மாணவர்களுடன் பேரணியில் கலந்து கொண்டார். இப்பேரணியில் சுமார் 500 மாணவர்கள் பங்கு பெற்றுள்ளனர். மேலும், இரு நாட்டுத் தலைவர்களின் புகைப்பட பதாகைகளை ஏந்தியும், அவர்களை வரவேற்பது போன்ற வசனங்களையும் கூறிய படியும் மாமல்லபுரத்தில் அணிவகுத்துச் சென்றனர்.