×

இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கு வாபஸ்! பணிந்தது பாஜக!!

இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற பீகார் அரசு முடிவு செய்துள்ளது. பிரபல இயக்குநரான மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பேர், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்து நிறுத்துங்கள் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதினர். பிரதமருக்கு கடிதம் எழுதியவர்களின் மீது பீகாரை சேர்ந்த வழக்கறிஞர் முசாபர்நகர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிமன்றம் தேச துரோக வழக்காக விசாரணைக்கு எடுத்தது. இதனால் அந்த கடிதத்தில் கையெழுத்திட்ட பிரபலங்கள் அனைவருமே
 

இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற பீகார் அரசு முடிவு செய்துள்ளது. 

பிரபல இயக்குநரான மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பேர், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்து நிறுத்துங்கள் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதினர். பிரதமருக்கு கடிதம் எழுதியவர்களின் மீது பீகாரை சேர்ந்த வழக்கறிஞர் முசாபர்நகர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிமன்றம் தேச துரோக வழக்காக விசாரணைக்கு எடுத்தது. இதனால் அந்த கடிதத்தில் கையெழுத்திட்ட பிரபலங்கள் அனைவருமே குற்றவாளிகளாக புகார் மனுவில் பதிவு செய்யப்பட்டது. 

இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், 49 பேர் மீது புகார் அளித்த நபர் தவறான தகவல்கள் அளித்ததாகவும், அதனால் இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பபெறுவதாகவும் பீகார் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும்  49 பிரபலங்கள் மீது புகார் அளித்த நபருக்கு எதிராக 182வது சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.