×

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

கடந்த 3 நாட்களாகத் தொடர்ந்து தங்க விலை சரிந்து வந்ததை தொடர்ந்து இன்று உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்க விலை உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்தது. அதன் பின்னர், கடந்த சில நாட்களாகத் தங்க விலை அதிரடியாக உயர்ந்து ரூ.33 ஆயிரத்தை எட்ட வரலாறு காணாத விலை உயர்வை அடைந்தது. அதனையடுத்து கடந்த 3 நாட்களாகத் தொடர்ந்து தங்க விலை சரிந்து வந்ததை தொடர்ந்து இன்று உயர்ந்துள்ளது. இன்றைய
 

கடந்த 3 நாட்களாகத் தொடர்ந்து தங்க விலை சரிந்து வந்ததை தொடர்ந்து இன்று உயர்ந்துள்ளது. 

இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்க விலை உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்தது. அதன் பின்னர், கடந்த சில நாட்களாகத் தங்க விலை அதிரடியாக உயர்ந்து ரூ.33 ஆயிரத்தை எட்ட வரலாறு காணாத விலை உயர்வை அடைந்தது. அதனையடுத்து கடந்த 3 நாட்களாகத் தொடர்ந்து தங்க விலை சரிந்து வந்ததை தொடர்ந்து இன்று உயர்ந்துள்ளது. 

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.28 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.3,962க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.31,696க்கு விற்கப்படுகிறது.

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 80 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.43.20க்கு விற்கப்படுகிறது. அதன் படி, வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.800 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.43,300க்கு விற்கப்படுகிறது.