×

இன்று முதல் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்லத் தடை : சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு!

மக்களின் நலனை கருத்தில் கொண்டு அம்மா உணவகங்கள் உள்ளிட்ட ஒரு சில சேவைகள் மட்டும் இயங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பிரதமரின் கோரிக்கைக்கு இணங்க நாளை இந்தியா முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ளது. அதன் படி தமிழகத்தில் அரசு பேருந்துகள், மெட்ரோ ரயில்கள்,பயணிகள் ரயில்கள், காய்கறி கடைகள், பால் விநியோகம் என ஏதும் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், டாஸ்மாக் கடைகளும் நாளை மூடப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் நாளை காலை 7
 

மக்களின் நலனை கருத்தில் கொண்டு அம்மா உணவகங்கள் உள்ளிட்ட ஒரு சில சேவைகள் மட்டும் இயங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பிரதமரின் கோரிக்கைக்கு இணங்க நாளை இந்தியா முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ளது. அதன் படி தமிழகத்தில் அரசு பேருந்துகள், மெட்ரோ ரயில்கள்,பயணிகள் ரயில்கள், காய்கறி கடைகள், பால் விநியோகம் என ஏதும் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், டாஸ்மாக் கடைகளும் நாளை மூடப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்கள் நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டிலேயே இருக்குமாறும் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எதற்கும் வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அம்மா உணவகங்கள் உள்ளிட்ட ஒரு சில சேவைகள் மட்டும் இயங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று மாலை 3 மணி முதல் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு செல்லக் கூடாது என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.  மெரினா மட்டும் இல்லாது திருவான்மியூர், பெசன்ட் நகர், பாலவாக்கம் கடற்கரைக்கும் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும், மறு உத்தரவு பிறப்பிக்கபடும் வரை கடற்கரைகளுக்கு செல்ல தடை விதித்துள்ளது.