×

இன்று அட்சய திருதியை… தங்கம் வாங்க முடியாத சூழலில் என்ன செய்யலாம்?

இந்து மற்றும் சமணர்களின் புனித நாளான அட்சய திருதியை இன்று கொண்டாடப்படுகிறது. கிருதயுகத்தில் இன்றைய தினத்தில்தான் பிரம்மா உலகத்தைப் படைத்தார். சமணர்களின் முதல் தீர்த்தங்கரரான ரிஷபதேவரின் நினைவு அனுசரிக்கப்படுகிறது. இன்று காலை 5.38க்குத் தொடங்கி நாளை (சனிக்கிழமை) காலை 7.59 வரை அட்சய திருதியை இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை அன்று நகைக் கடைகள் மக்கள் கூட்டத்தால் நிறைந்திருக்கும். அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவது நம்முடைய இல்லத்துக்கு சகல ஐஸ்வர்யங்களையும் கொண்டு வரும் என்பதால்
 

இந்து மற்றும் சமணர்களின் புனித நாளான அட்சய திருதியை இன்று கொண்டாடப்படுகிறது. கிருதயுகத்தில் இன்றைய தினத்தில்தான் பிரம்மா உலகத்தைப் படைத்தார். சமணர்களின் முதல் தீர்த்தங்கரரான ரிஷபதேவரின் நினைவு அனுசரிக்கப்படுகிறது. இன்று காலை 5.38க்குத் தொடங்கி நாளை (சனிக்கிழமை) காலை 7.59 வரை அட்சய திருதியை இருக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை அன்று நகைக் கடைகள் மக்கள் கூட்டத்தால் நிறைந்திருக்கும். அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவது நம்முடைய இல்லத்துக்கு சகல ஐஸ்வர்யங்களையும் கொண்டு வரும் என்பதால் தங்கம் வாங்கக் கூட்டம் அலைமோதும். இதற்கு முன்பதிவு எல்லாம் செய்வார்கள்.

இந்த ஆண்டு கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. காய்கறி, மளிகை, பால், மருந்துக் கடைகள் தவிர்த்து எதுவும் திறக்கப்படக் கூடாது. இந்த நிலையில் இன்று அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. இல்லத்துக்கு சகல ஐஸ்வர்யங்களையும் கொண்டு வரும் இந்த நாளில் தங்கம் வாங்க முடியவில்லையே என்ற கவலை ஒவ்வொருவருக்கும் உள்ளது.

அட்சய திருதியை என்றால் வளர்க என்று அர்த்தம். அதாவது இன்றைய தினத்தில் தங்கம் வாங்குவது மட்டுமல்ல, நாம் தொடங்கும் எந்த ஒரு காரியமும், செயலும் மேன்மேலும் வளரும் என்பது நம்பிக்கை. அதனால், இன்றைய தினத்தில் வீட்டிலிருந்தபடி நல்ல காரியத்தைத் தொடங்குவோம்.

இன்று நாம் செய்யும் நற்செயலுக்கு 100 மடங்கு பலன் கிட்டும் என்பது நம்பிக்கை. எனவே, இன்றைய நாளில் கொரோனா ஊரடங்கு காரணமாக உணவு இன்றி அவதியுறுபவர்களுக்கு உணவு வழங்குவோம். தர்மங்கள் செய்வோம். இதன் மூலம் 100 மடங்கு புண்ணியத்தை நாம் பெறலாம். இன்றைய நாளில் அன்னதானம் செய்தால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும்.

தங்கம் வாங்குவது மட்டுமல்ல மஞ்சள், உப்பு வாங்குவதும் கூட ஐஸ்வர்யத்தை கொண்டு வரும் என்று பெரியவர்கள் சொல்கின்றனர். எனவே, மஞ்சள், உப்பு வாங்குவதன் மூலமும் தங்கம் வாங்கியதன் பயனைப் பெறலாம்.

நகை வாங்குவது மட்டுமல்ல, இன்றைய தினத்தில் விஷ்ணு, விநாயகர், முன்னோர் வழிபாடு செய்வது குடும்பத்துக்கு ஐஸ்வர்யங்களை கொண்டு வரும். எனவே, வழிபட மறக்க வேண்டாம்.

வழிபாட்டின் போது பால், பால் பொருட்களான தயிர், நெய் மற்றும் தேங்காய் உள்ளிட்டவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுப் பொருளை நைவேத்தியம் செய்து, மற்றவர்களுக்கு வழங்குவதன் மூலம் பலன்களைப் பெறலாம்.