×

இந்த ஐடியா நல்லா இருக்கே..2000 ரூபாய் பட்ஜெட்டில் நடந்த திருமணம்; 3 வருடம் காதலித்த பெண்ணின் கரம் பிடித்த இளைஞர்!

இவர்கள் திருமண பேச்சை ஆரம்பித்த சமயத்தில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சேர்ந்த கண்ணன் என்னும் இளைஞர் கால் டாக்ஸி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரும் மதுரை அலங்காநல்லூரைச் சேர்ந்த பிரியா என்ற பெண்ணும் 3 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் திருமணம் செய்து கொள்ள இரு வீட்டாரின் சம்மதம் கேட்க, எல்லாரும் பச்சைக்கொடி காட்டியுள்ளனர். அதனையடுத்து இவர்கள் திருமண பேச்சை ஆரம்பித்த சமயத்தில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஊரடங்கு முடியும் வரை திருமணம் நடத்த வேண்டாம்
 

இவர்கள் திருமண பேச்சை ஆரம்பித்த சமயத்தில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சேர்ந்த கண்ணன் என்னும் இளைஞர் கால் டாக்ஸி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரும் மதுரை அலங்காநல்லூரைச் சேர்ந்த பிரியா என்ற பெண்ணும் 3 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் திருமணம் செய்து கொள்ள இரு வீட்டாரின் சம்மதம் கேட்க, எல்லாரும் பச்சைக்கொடி காட்டியுள்ளனர். அதனையடுத்து இவர்கள் திருமண பேச்சை ஆரம்பித்த சமயத்தில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. 

ஊரடங்கு முடியும் வரை திருமணம் நடத்த வேண்டாம் என்று இந்த காதல் ஜோடி முடிவு செய்திருந்த நிலையில், ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கப்பட்டுக் கொண்டே வந்ததால் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். இரு வீட்டாரின் சம்மதத்துடன் கோவிலில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து ஏற்பாடு செய்துள்ளனர். அதன் படி வீட்டின் அருகே இருந்த விநாயகர் கோவிலில் நேற்று திருமணம் நடந்துள்ளது. 

இந்த திருமணத்தில் ஹைலைட் என்னவென்றால், திருமணம் மொத்தமாக ரூ.2000 பட்ஜெட்டில் நடந்துள்ளது. தாலி, மாலை, அர்ச்சனை பொருட்கள் என அனைத்துமே அந்த பட்ஜெட்டிலேயே முடிந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பெண் வீட்டார் 2 பேர், ஆண் வீட்டார் 3 பேர் மற்றும் மணமக்கள் 2 பேர் என மொத்தம் 7 பேர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர். மேலும், வீட்டிலிருந்து கோவிலுக்கு நடந்தே சென்று திருமணம் முடிந்த பிறகும் நடந்தே வந்துள்ளனர். இவ்வாறு திருமணம் எளிமையாக நடந்து முடிந்து விட்டதால், ஊரடங்கு முடிந்த பிறகு ரிஷப்ஷன் வைக்க திட்டமிட்டுள்ளனர் இந்த காதல் ஜோடி.