×

இடது காலை எடுத்துட்டாங்க…சிகிச்சைக்கு பணம் இல்லை: கோவை விபத்தில் சிக்கிய அனுராதாவின் பரிதாப நிலைமை!

சுயநினைவுக்குத் திரும்பாத அனுராதாவுக்கு கால்களில் செயற்கையாக ரத்த நாளங்கள் பொருத்தப்பட்டது.ஆனால் அது பலனளிக்கவில்லை. இதனால் அவரது இடது கால் அகற்றப்பட்டுள்ளது. அ.தி.மு.க பிரமுகர் யோகா மாஸ்டர் சுவாமி போமிவர்தன் – தாமரை இல்ல திருமணம் கடந்த 10 ஆம் தேதி நடந்துள்ளது. அதற்காகவே போஸ்டர்களும், கோடி கம்பங்களும் வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த அனுராதா என்ற பெண் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 12 ஆம் தேதி காலை பணிக்கு செல்வதற்காக அனுராதா
 

சுயநினைவுக்குத் திரும்பாத அனுராதாவுக்கு  கால்களில் செயற்கையாக ரத்த நாளங்கள் பொருத்தப்பட்டது.ஆனால்  அது பலனளிக்கவில்லை. இதனால் அவரது இடது கால் அகற்றப்பட்டுள்ளது.  

அ.தி.மு.க பிரமுகர் யோகா மாஸ்டர் சுவாமி போமிவர்தன் – தாமரை இல்ல திருமணம் கடந்த 10 ஆம் தேதி  நடந்துள்ளது. அதற்காகவே போஸ்டர்களும், கோடி கம்பங்களும் வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த அனுராதா என்ற பெண் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

கடந்த 12 ஆம் தேதி  காலை பணிக்கு செல்வதற்காக அனுராதா இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கோல்டுவின்ஸ்  சாலை  ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த அதிமுக கொடி கம்பம் சரிந்து விழுந்தது.  இதனால் அனுராதா நிலை தடுமாறி விழுந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த லாரி, அனுராதாவின் கால்கள் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.இதையடுத்து கோவை தனியார் மருத்துவமனையில் அனுராதா அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இன்னும் கூட சுயநினைவுக்குத் திரும்பாத அனுராதாவுக்கு  கால்களில் செயற்கையாக ரத்த நாளங்கள் பொருத்தப்பட்டது.ஆனால்  அது பலனளிக்கவில்லை. இதனால் அவரது இடது கால் அகற்றப்பட்டுள்ளது.  சில நாட்கள் கழித்தே அவரது வலது காலில் உள்ள எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளிக்கவுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய அனுராதாவின் குடும்பம்  மேற்கொண்டு சிகிச்சை எடுக்க, செய்வதறியாது திகைத்து போயுள்ளது. அனுராதாவின் மருத்துவ சிகிச்சைக்கு உதவ நினைப்பவர்கள் உதவக்கோரி அம்மருத்துவமனை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

உதவிக்கு : அனுராதாவின் மருத்துவ சிகிச்சை