×

ஆவின் பால் டேங்கர் லாரிகள் இயங்காது: லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு..!

தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனங்களுக்கு தினசரி சுமார் 30 லட்சம் லிட்டர் பால் ஒப்பந்த லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனங்களுக்கு தினசரி சுமார் 30 லட்சம் லிட்டர் பால் ஒப்பந்த லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. பால் கொண்டு செல்லும் டேங்கர் உரிமையாளர்களுடன் 2 வருடங்களுக்கு ஒரு முறை ஒப்பந்தங்கள் போடப்பட்டு, லாரிகளுக்கு உண்டான வாடகை வழங்கப் படும். கடைசியாக 2016-2018 ஆம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டதையடுத்து இன்னும்
 

தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனங்களுக்கு தினசரி சுமார் 30 லட்சம் லிட்டர் பால் ஒப்பந்த லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனங்களுக்கு தினசரி சுமார் 30 லட்சம் லிட்டர் பால் ஒப்பந்த லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. பால் கொண்டு செல்லும் டேங்கர் உரிமையாளர்களுடன் 2 வருடங்களுக்கு ஒரு முறை ஒப்பந்தங்கள் போடப்பட்டு, லாரிகளுக்கு உண்டான வாடகை வழங்கப் படும். கடைசியாக 2016-2018 ஆம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டதையடுத்து இன்னும் புதிய ஒப்பந்தம் போடப் படவில்லை என்றும் லாரிகளின் வாடகை பணம் 10 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது என்றும் கூறப்படுகிறது. 

இதனால், நேற்று நாமக்கல்லில் டேங்கர் லாரிகள் உரிமையாளர்கள் சங்கங்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்டு அதில் இந்த பிரச்சனைக்கு உரியத் தீர்வு காண்பது பற்றி ஆலோசிக்கப் பட்டது. இதனையடுத்து, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு படப்போவதாக ஆவின் நிறுவனத்திற்குப் பால் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரி உரிமையாளர் சங்கங்கள்  அறிவித்துள்ளன.

இது குறித்துப் பேசிய பொறுப்பாளர் சுப்பிரமணி, கடந்த 5 மாதங்களாக ரூ.10 கோடி வாடகை பணத்தை அரசுவழங்கவில்லை. புதிய ஒப்பந்தங்கள் போடுவதற்கான அறிக்கையைக் கடந்த மாதமே நாங்கள் தாக்கல் செய்த நிலையில், அரசு இன்னும் அதனை நிலுவையினுள் வைத்துள்ளது. இதனால் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு அரசு ஒரு தீர்வு காணும் வரை நாளை காலை முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறியுள்ளார்.