×

ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயிலில் விமர்சையாக நடைபெற்ற குருபெயர்ச்சி விழா..

ஆண்டு தோறும் குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் பிரவேசம் செய்வார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா விமர்சையாக நடக்கும். ஆண்டு தோறும் குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் பிரவேசம் செய்வார். அதே போல, இந்த ஆண்டு விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இன்று அதிகாலை 3:49 மணிக்குப் பிரவேசம் செய்தார். நவகிரகங்களில் தலங்களில் முக்கியமானதாகப் போற்றப்படும் இந்த ஆலயத்தில்,குருப் பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
 

ஆண்டு தோறும் குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் பிரவேசம் செய்வார்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா விமர்சையாக நடக்கும். ஆண்டு தோறும் குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் பிரவேசம் செய்வார். அதே போல, இந்த ஆண்டு விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இன்று அதிகாலை 3:49 மணிக்குப் பிரவேசம் செய்தார். நவகிரகங்களில் தலங்களில் முக்கியமானதாகப் போற்றப்படும் இந்த ஆலயத்தில்,குருப் பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 

இன்று அதிகாலையிலிருந்து ஆபத்சகாயேசுவரர் கோயிலில் எழுந்தருளியுள்ள குருபகவானுக்கு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்வைக் காண பல்வேறு பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் திரண்டனர்.

மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் படி, கோயிலில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குருபகவானை தரிசிக்கத் தடுப்புகள் அமைக்கப்பட்டு மக்கள் வரிசையில் அனுப்பப்பட்டனர். மேலும், மக்களின் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அதனால், எந்த தடங்களுமின்றி குருபெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது.