×

ஆரோவில் அலங்கார தீபம்! அன்னையின் குரல் பின்னணியில் ஒலிக்க நகரதின கொண்டாட்டம்.

புதுச்சேரி அருகேயுள்ள சர்வதேச நகரமான ஆரோவில் உதயமான தினம் பிப்ரவரி28 .இதில் உலகெங்கும் இருந்து வந்து குடியேறிய மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். புதுச்சேரி: புதுச்சேரி அருகேயுள்ள சர்வதேச நகரமான ஆரோவில் உதயமான தினம் பிப்ரவரி 28. இதில் உலகெங்கும் இருந்து வந்து குடியேறிய மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.ஆரோவில் நகரின் 53 வது பிறந்த தினம் இன்று.அதை முன்னிட்டு பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், ‘போன் பயர்’ எனப்படும் அலங்கார தீபம் ஏற்றி இன்று கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர். மனிதகுல
 

புதுச்சேரி அருகேயுள்ள சர்வதேச நகரமான ஆரோவில் உதயமான தினம் பிப்ரவரி28 .இதில் உலகெங்கும் இருந்து வந்து குடியேறிய மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

புதுச்சேரி: புதுச்சேரி அருகேயுள்ள சர்வதேச நகரமான ஆரோவில் உதயமான தினம் பிப்ரவரி 28. இதில் உலகெங்கும் இருந்து வந்து குடியேறிய மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.ஆரோவில் நகரின் 53 வது பிறந்த தினம் இன்று.அதை முன்னிட்டு பல்வேறு  நாடுகளைச்  சேர்ந்தவர்கள், ‘போன் பயர்’ எனப்படும் அலங்கார தீபம் ஏற்றி  இன்று கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர்.

மனிதகுல ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் புதுச்சேரி ஆரோவில் சர்வதேச நகரை வடிவமைக்கும் பணியில்,பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் மதம், இனம், மொழி, அரசியல் வேறுபாடுகளை கடந்து, அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். 

அரவிந்தர் ஆசிரம அன்னையின் முயற்சியால், கடந்த 1967-ம் ஆண்டு,பிப்ரவரி 28-ந்தேதி, ஆரோவில் சர்வதேச நகரம் ஆரம்பிக்கப்பட்டது.இதையொட்டி, ஆரோவில் மாத்திர்  மந்திர் அருகில் அமைந்துள்ள ஆம்பி தியேட்டரில் இன்று அதிகாலை 5 மணிக்கு ஆயிரக்கணக்கானோர் கூடி அலங்கார தீபம் ஏற்றி, தியானத்தில் ஈடுபட்டனர். 

இந்த கூட்டு தியானத்தின்போது,அன்னை மீரா பேசி பதிவு செய்து வைக்கப்பட்டு இருக்கும் ஆரோவில் நகர சாசனம் ஒலிபரப்பப்பட்டது. அங்கு ஏற்றப்பட்டிருந்த  விளக்குகளின் ஒளியில் மாத்திரி மந்திர் தங்க நிறத்தில் ஜொலித்தது  அன்னையின் பக்த்தர்களான ஆரோவில் வாசிகள் அனைவரும் பக்தி பரவசத்துடன் ஆராதனை செய்து கொண்டாடினர்.