×

ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம் எது?

நவராத்திரி வழிபாட்டின் மிக முக்கிய நாளாக கருதப்படும் ஆயுத பூஜையினை எந்த நேரத்தில் வாழிபாடு செய்ய வேண்டும் என்பதினை பற்றி இந்த பதிவில் பார்போம். நவராத்திரி காலத்தில் அம்பிகையை வழிபடுவது மகத்தான நன்மைகளை நமக்கு அருளக்கூடியது.நவராத்திரியின் முதல் மூன்று நாள்கள் துர்கா தேவியையும் அடுத்த மூன்று நாள்கள் லட்சுமிதேவியையும், கடைசி மூன்று நாள்கள் சரஸ்வதிதேவியையும் வழிபட்டு வேண்டிய அருளினை பெறலாம். நவராத்திரி நாட்களில் வழிபாடு செய்ய இயலாதவர்கள் அஷ்டமியன்று துர்கையை வழிபட்டு அன்று இரவு விழித்திருந்தால், அவர்களின்
 

நவராத்திரி வழிபாட்டின் மிக முக்கிய நாளாக கருதப்படும் ஆயுத பூஜையினை எந்த நேரத்தில் வாழிபாடு செய்ய வேண்டும் என்பதினை பற்றி இந்த பதிவில் பார்போம்.

நவராத்திரி காலத்தில் அம்பிகையை வழிபடுவது மகத்தான நன்மைகளை நமக்கு அருளக்கூடியது.நவராத்திரியின் முதல் மூன்று நாள்கள் துர்கா தேவியையும் அடுத்த மூன்று நாள்கள் லட்சுமிதேவியையும், கடைசி மூன்று நாள்கள் சரஸ்வதிதேவியையும் வழிபட்டு வேண்டிய அருளினை பெறலாம்.

நவராத்திரி நாட்களில் வழிபாடு செய்ய இயலாதவர்கள் அஷ்டமியன்று துர்கையை வழிபட்டு அன்று இரவு விழித்திருந்தால், அவர்களின் வாழ்க்கையை துர்காதேவியானவள் கண்விழித்துக் காப்பாள் என்பது நம் முன்னோர்களின் நீண்ட கால நம்பிக்கையாகும்.

மகா நவமியன்று நாம் அன்றாடம்  உபயோகப்படுத்தும் பொருட்களையும், குழந்தைகளின் புத்தகங்களையும் பூஜையில் வைத்து வழிபட்டு, அன்று அவற்றைப் பயன்படுத்தாமல் அடுத்த நாள் விஜயதசமியன்று அந்தப் பொருள்களைக் கண்டிப்பாகப் பயன்படுத்துவது சகல விதமான ஐஸ்வர்யங்களையும் நாம் பெறலாம்.

 

ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம்:

இந்த ஆண்டு ஆயுதபூஜை சரஸ்வதி பூஜை செய்ய அக்டோபர் 18-ம் தேதி வியாழக்கிழமை பிற்பகல் 2.06 மணி முதல் 2.52 மணி வரை நல்ல நேரம் உள்ளது. நவமி திதி அக்டோபர் 17-ம் தேதி பிற்பகல் 12.49 மணிக்கு தொடங்கி 18-ம் தேதி 3.28 மணிவரை உள்ளது.