×

ஆயில்ய நட்சத்திரகாரர்கள் குணாதிசயங்களும் வழிபாட்டு கோயில்களும் 

ஆயில்ய நட்சத்திரகாரர்கள் இயல்பான குணநலன்கள் பற்றியும் அவர்கள் வழிபாடு செய்ய வேண்டிய கோயில்களை பற்றியும் பார்போம். ஆயில்ய நட்சத்திரம் புதனுடைய நட்சத்திரம் ஆகும். ஆயில்ய நட்சத்திரத்துக்கு புதனும், சந்திரனும் அதிபதிகள். இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் ஒன்பதாவது இடத்தை பெறுவது ஆயில்ய நட்சத்திரமாகும். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. பாம்பின் வடிவில் தோற்றமளிக்கும் ஆறு நட்சத்திரக் கூட்டம் ஆயில்யம் எனப்படுகிறது. இது கடக ராசியில் வரக்கூடிய நட்சத்திரம் ஆகும். இதன் அதி தேவதை நாகம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

ஆயில்ய நட்சத்திரகாரர்கள் இயல்பான குணநலன்கள் பற்றியும் அவர்கள் வழிபாடு செய்ய வேண்டிய கோயில்களை பற்றியும் பார்போம்.

ஆயில்ய நட்சத்திரம் புதனுடைய நட்சத்திரம் ஆகும். ஆயில்ய நட்சத்திரத்துக்கு புதனும், சந்திரனும் அதிபதிகள். இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் ஒன்பதாவது இடத்தை பெறுவது ஆயில்ய நட்சத்திரமாகும்.

இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. பாம்பின் வடிவில் தோற்றமளிக்கும் ஆறு நட்சத்திரக் கூட்டம் ஆயில்யம் எனப்படுகிறது. இது கடக ராசியில் வரக்கூடிய நட்சத்திரம் ஆகும். இதன் அதி தேவதை நாகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் பிறந்தவர்கள் சமயோஜித புத்தி உள்ளவர்கள். கனிவான பேச்சால் கல் மனதையும் கரைப்பவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் மன ஓட்டத்தை நாடி பிடித்துப் பார்ப்பவர்கள்.

இந்த நட்சத்திரத்தில் ந‌ல்ல அ‌றிவா‌ளிக‌ள்,பு‌த்‌திசா‌லிக‌ள், பெரு‌ம் பண‌க்கார‌ர்க‌ள், அர‌சிய‌ல் தலைவ‌ர்‌க‌ள் உள்ளிட்ட பலர் பிறந்துள்ளனர்.

உடல் வலிமையும் மன வலிமையும் இவர்களிடம் ஒருங்கே காணப்படும். மனம் விரும்பியவண்ணம் வாழ நினைப்பவர்கள். 

தாங்கள் விரும்பியதை அடைய  எந்தவித முயற்சியையும் மேற்கொள்வார்கள். மாந்த்ரீகம்,தாந்த்ரீகம் போன்றவற்றில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள்.

நாளை நடப்பதை இன்றே அறியும் நுண்ணிய ஆற்றல் இவர்களுக்கு உண்டு. பகை பல வந்தாலும் பதறாமல் இருப்பார்கள். மற்றவர்களுடைய ஆலோசனையை எளிதில் ஏற்கமாட்டார்கள்.

ஜலாராசியில் இந்த நட்சத்திரம் வருவதால் கற்பனை திறன் அதிகமிருக்கும். நல்ல ஞாபக சக்தியும் உண்டு. இவர்களிடம் பழகுவது கடினம் என்றாலும் பழகியபின் இவர்களை பிரிய முடியாது.

தன்னை நம்பியவர்களுக்கு எல்லாவித உதவியும் செய்வார்கள். இதனால் அடிக்கடி ஏமாந்து போவதும் உண்டு.

கலை நடிப்பு, ஆராய்ச்சித் துறைகளிலும், உணவுப் பொருட்கள் தொடர்பான சமையல் கலைகளிலும் சிறந்து விளங்குவார்கள்.

கலைநுட்பமும், வாக்கு சாதுர்யமும், சங்கீதமும் இவர்களிடத்தில் அதிகம் குடி கொண்டிருக்கும். 

வழிபடவேண்டிய தெய்வம் : மீனாட்சி அம்மன், முருகப்பெருமான், சனீஸ்வரன்,சிவன்,

வழிபாட்டு கோயில்கள் : மதுரை ,திங்களூர் ,திருவாரூர் அருகிலுள்ள எண்கண்,சங்கரன் கோயில், திருபரங்குன்றம், திருகொள்ளிக் காடு,திருவெண்காடு.