×

“அவனுக்கு நடந்தது போல இனி யாருக்கும் நடக்க கூடாது” : நண்பன் நினைவுநாளில் ரத்த தானம் செய்த நண்பர்கள்!

அனுமதிக்கப்பட்ட போது உரிய நேரத்தில் ரத்தம் கிடைக்காததால் அவர் பரிதாபமாக பலியானார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்தவர் நிர்மல் குமார். இவர் கடந்தாண்டு சென்னைக்கு வந்துகொண்டிருக்கும் போது மறைமலை நகர் அருகே விபத்தில் சிக்கினார். இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது உரிய நேரத்தில் ரத்தம் கிடைக்காததால் அவர் பரிதாபமாக பலியானார். இந்நிலையில் நிர்மலின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனால் நிர்மல் குமார் நண்பர்கள் நேற்று மதுராந்தகம் அரசு மருத்துவமனையில்
 

அனுமதிக்கப்பட்ட போது  உரிய நேரத்தில் ரத்தம் கிடைக்காததால் அவர் பரிதாபமாக பலியானார். 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்தவர் நிர்மல் குமார். இவர் கடந்தாண்டு சென்னைக்கு வந்துகொண்டிருக்கும் போது  மறைமலை நகர் அருகே விபத்தில் சிக்கினார். இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது  உரிய நேரத்தில் ரத்தம் கிடைக்காததால் அவர் பரிதாபமாக பலியானார். 

இந்நிலையில் நிர்மலின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனால் நிர்மல் குமார் நண்பர்கள் நேற்று மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்தனர். இதுகுறித்து கூறிய அவர்கள், எங்கள்  நண்பனுக்கு உரிய நேரத்தில் ரத்தம் கிடைக்காததால் அவர் உயிரிழந்தான். இனி ரத்தம் கிடைக்காமல் எந்த உயிரும் போக கூடாது என்பதால் நாங்கள் ரத்த தானம் செய்கிறோம். இனி ஆண்டுதோறும் ரத்த தானம் செய்யவுள்ளோம்’ என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.