×

அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை இளம்பெண்ணின் உயிரை பறித்தது- ஸ்டாலின் வேதனை 

அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம் என, அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகை சுபஶ்ரீ என்பவரின் வாழ்க்கையைக் காவு வாங்கி இருக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பள்ளிக்கரணையில் திருமணத்திற்காக வைத்திருந்த பேனர் இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ என்ற பெண் மீது விழுந்ததால் நிலை தடுமாறி சாலையில் விழுந்த அந்த பெண் மீது தண்ணீர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதற்கு அரசின் அலட்சியம்தான் காரணம் எனக்கூறிய ஸ்டாலின், சுபஸ்ரீயின்
 

அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம் என, அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகை சுபஶ்ரீ என்பவரின் வாழ்க்கையைக் காவு வாங்கி இருக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை பள்ளிக்கரணையில் திருமணத்திற்காக வைத்திருந்த பேனர் இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ என்ற பெண் மீது விழுந்ததால் நிலை தடுமாறி சாலையில் விழுந்த அந்த பெண் மீது தண்ணீர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதற்கு அரசின் அலட்சியம்தான் காரணம் எனக்கூறிய ஸ்டாலின்,  சுபஸ்ரீயின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது? என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார்.