×

அரசி, மளிகை பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது : ஏ.எம்.விக்கிரமராஜா உறுதி!

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மளிகைக் கடைகளிலும் இருப்பில் உள்ள பொருட்களே விற்கப்பட்டு வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டால் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, பருப்பு வகைகள்,
 

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மளிகைக் கடைகளிலும் இருப்பில் உள்ள பொருட்களே விற்கப்பட்டு வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டால் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பேசிய வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, பருப்பு வகைகள், பூண்டு, வேர்க்கடலை உள்ளிட்ட பொருட்களுக்கு நாம் மகாராஷ்டிராவையே நம்பியுள்ளோம். இவை தற்போது போதிய அளவில் இல்லை. அதனால், மகாராஷ்டிராவில் இருந்து பொருட்களை வரவழைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அத்தியாவசியப் பொருள் விநியோக குழுவைச் சேர்ந்த ககன்தீப் சிங்கிடம் கேட்டதன் பேரில், அவர் நமக்கு உதவி செய்து வருகிறார். அதே போல எண்ணெய் ஆலைகள் இயங்கவும் அனுமதி கேட்டுள்ளோம். அதனால் அரசிக்கும், மளிகை பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படாது என்று கூறியுள்ளார்.