×

அப்துல்கலாம் பிறந்தநாள்: அரசுப் பள்ளிகள் கண்காட்சி நடத்த வேண்டும்..!

‘கனவு காணுங்கள்’ என்ற அவரின் வாக்கியங்கள் இளைஞர்களிடம் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. விண்வெளி நாயகன் என மக்கள் மத்தியில் பேராதரவைப் பெற்ற மாமனிதன் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் பிறந்தார். ‘கனவு காணுங்கள்’ என்ற அவரின் வாக்கியங்கள் இளைஞர்களிடம் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞானி என புகழாரம் சூட்டப்பட்ட, அப்துல் கலாம் இந்தியாவிற்காக ஆற்றிய சேவைகள் எண்ணிலடங்கா. மாணவர்களின் எதிர்காலத்திற்காக பாடுபட்ட அப்துல்
 

‘கனவு காணுங்கள்’ என்ற அவரின் வாக்கியங்கள் இளைஞர்களிடம் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.

விண்வெளி நாயகன் என மக்கள் மத்தியில் பேராதரவைப் பெற்ற மாமனிதன் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் பிறந்தார். ‘கனவு காணுங்கள்’ என்ற அவரின் வாக்கியங்கள் இளைஞர்களிடம் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞானி என புகழாரம் சூட்டப்பட்ட, அப்துல் கலாம் இந்தியாவிற்காக ஆற்றிய சேவைகள் எண்ணிலடங்கா.  மாணவர்களின் எதிர்காலத்திற்காக பாடுபட்ட அப்துல் கலாம் ஷில்லாங்கில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி உரையாற்றிக் கொண்டிருக்கும் போது மாணவர்கள் மத்தியிலேயே உயிர் நீத்தார்.

இன்றும் பலர் நினைவில் வாழுந்துக் கொண்டிருக்கும் அப்துல் கலாமிற்கு வரும் அக்டோபர் 15 ஆம் தேதி 88ஆவது பிறந்தநாள். விண்வெளி நாயகனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரைப் போற்றும் வகையில் அனைத்து அரசுப் பள்ளிகளும் வரும் 14 மற்றும் 15 ஆம் தேதி அறிவியியல் கண்காட்சி நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.