×

அனுமன் ஜெயந்தி : தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில்களில் நாளை சிறப்பு வழிபாடு! 

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாளை சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. மார்கழி மாதம் அமாவாசையும் மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் அனுமன். இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை, பல புராணங்களிலும் சொல்லப்படுகிறது . இதற்கு முக்கிய காரணம் வைணவத்தில் ராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் இருப்பது தான். ஹயக்கிரீவர், சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி போன்று ஆஞ்சநேயரை வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். சனி தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்புவாய்ந்த ஒன்றாகும்.
 

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாளை சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

மார்கழி மாதம் அமாவாசையும் மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் அனுமன். இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை, பல புராணங்களிலும் சொல்லப்படுகிறது .

இதற்கு முக்கிய காரணம் வைணவத்தில் ராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் இருப்பது தான்.  ஹயக்கிரீவர், சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி போன்று ஆஞ்சநேயரை வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். 

சனி தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்புவாய்ந்த ஒன்றாகும். ஆஞ்சநேயர் ராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு வேடம் ஏற்றனர். அதில் மகாவிஷ்ணு ராமனாகவும், மகாலட்சுமி சீதாதேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும் பாத்திரமேற்றனர். 

இந்த ராமாயணத்தில் பங்குபெற எல்லாம் வல்ல சிவனுக்கும் ஆசை ஏற்பட்டது. அத்துடன் மகாவிஷ்ணுவுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமும் இருந்து வந்தது. இதனால் சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து ராமாயணத்தில் ராமருக்கு சேவை செய்தார் என்பது முக்கியமான ஒன்றாகும்.

அனுமன் அவதார நாளில் அருகில் உள்ள ஆஞ்சநேயர் தலத்திற்கு சென்று ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே ராமதூதாய தீமஹி தன்னோ அனுமன் பிரசோதயாத் என்ற அனுமன் காயத்ரி சொல்லி அவரது அருள்பெறுவோம்.

அத்துடன் அனுமன் ஜெயந்தியன்று அவரது புகழ்பரப்பும் அனுமன் சாலீஸா பாராயணம் செய்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கையாகும்.

தமிழகத்தில் பிரசித்திபெற்ற அனுமன் ஆலயங்களான ராமேஸ்வரம், நாமக்கல்,சூசிந்திரம்,பஞ்சவடி, மற்றும் சென்னையை சுற்றி அமைந்துள்ள அசோக் நகர், நங்கநல்லூர், வளசரவாக்கம் உள்ளிட்ட ஆலயங்களில் நாளை காலை முதல் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், லட்சார்ச்சனையும் நடைபெற உள்ளது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த நிகழ்வில் எராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளதால் விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆலய நிர்வாகமும் காவல்துறையும் இனைந்து செய்து வருகின்றனர்.