×

அனுமன் ஜெயந்தி : ஆஞ்சநேயர் கோயில்களில் பக்தர்கள் வழிபாடு

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. ஆஞ்சநேயர் ராம நாமத்தை தவிர வேறு எதுவும் அறியாத அவர் தன்னலமில்லாத வீரனாக திகழ்ந்தார். சீதையை மீட்டு வருவதற்காக அவர் ராமனிடம் எந்தவித பிரதிபலனையும் கருதவில்லை. ராமனுக்கு பணிவிடை செய்வதற்காகவே அவர் வாழ்ந்தார். அடக்கம், தைரியம், அறிவுக்கூர்மையுடன் ஆஞ்சநேயர் திகழ்ந்தார் இது மட்டுமின்றி எல்லா தெய்வீக குணங்களும் அவரிடம் இருந்தன. ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டு கடலைக் கடத்தல், இலங்கையை
 

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.

ஆஞ்சநேயர் ராம நாமத்தை தவிர வேறு எதுவும் அறியாத அவர் தன்னலமில்லாத வீரனாக திகழ்ந்தார். சீதையை மீட்டு வருவதற்காக அவர் ராமனிடம் எந்தவித பிரதிபலனையும் கருதவில்லை. ராமனுக்கு பணிவிடை செய்வதற்காகவே அவர் வாழ்ந்தார். 

அடக்கம், தைரியம், அறிவுக்கூர்மையுடன் ஆஞ்சநேயர் திகழ்ந்தார் இது மட்டுமின்றி எல்லா தெய்வீக குணங்களும் அவரிடம் இருந்தன. ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டு கடலைக் கடத்தல், இலங்கையை எரித்தல், சஞ்சீவினி மூலிகையை கொண்டு வந்து லட்சுமணனை எழுப்புதல் ஆகிய அரிய செயல்களை அவர் செய்தார்.

தன் அறிவைப் பற்றியோ, தொண்டைப்பற்றியோ பிறரிடம் தற்பெருமையாக சொன்னதே இல்லை. இத்தகைய பெருமைக்குரிய ஆஞ்சநேயர் மார்கழி மாதம் அமாவாசையும் கூடிய  சுப தினத்தில் மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தார் .

அனுமன் அவதார நாளில் அருகில் உள்ள ஆஞ்சநேயர் தலத்திற்கு சென்று ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே ராமதூதாய தீமஹி தன்னோ அனுமன் பிரசோதயாத் என்ற அனுமன் காயத்ரி சொல்லி அவரது அருள்பெறுவோம்.

அத்துடன் அனுமன் ஜெயந்தியன்று அவரது புகழ்பரப்பும் அனுமன் சாலீஸா பாராயணம் செய்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கையாகும்.

அனுமன் ஜெயந்தி விழா இன்று அதிகாலை முதல் தமிழகத்தில் பிரசித்திபெற்ற அனுமன் ஆலயங்களான ராமேஸ்வரம், நாமக்கல், சூசிந்திரம்,பஞ்சவடி, மற்றும் சென்னையை சுற்றி அமைந்துள்ள அசோக் நகர், நங்கநல்லூர், வளசரவாக்கம் உள்ளிட்ட ஆலயங்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், லட்சார்ச்சனையும் நடைபெற்றது.

இதனை அடுத்து பல்வேறு ஆலயங்களிலும் இன்று மதியம் பிரம்மாண்டமான அன்னதானத்திற்கு ஆலய நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர் 

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த விழாவில் எராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அனுமனை வழிபாடு செய்து வருவதால் விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆலய நிர்வாகமும் காவல்துறையும் இனைந்தது மிகவும் சிறப்பாக செய்து இருந்தனர்.